ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் στσίστ.01/2026 ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள்-1 இல் 222 மையங்களில் 59,535 ஆசிரியர்களும், தாள்-II இல் 613 மையங்களில் 1,60,929 ஆசிரியர்களும் தேர்வை எழுதினர். இத்தகுதித்தேர்வில் தாள்-1 மற்றும் தாள்-II சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டுள்ளதாக இத்தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்ததாக சில தினசரி பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இத்தேர்வு வினாத்தாள் சார்ந்த விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சார்ந்த 13.02.2026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் (Structure and content) கீழ் வழங்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அரசாணை (நிலை) எண்.181. பள்ளிக் கல்வித் (C2) துறை, நாள்.15.11.2011 இன்படியும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தாள்-I சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (v) இல் The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based
மாநிலத்தின் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் தரம் மற்றும் இணைப்புகள் மேல்நிலைப் பள்ளி நிலை வரை இருக்கும். தமிழ் நௌ ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II இல் உள்ள கேள்விகள், மாநிலத்தின் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் தரம் மற்றும் இணைப்புகள் மேல்நிலைப் பள்ளி (சீனியர் செகண்டரி) நிலை வரை இருக்கும்.
எனவே, அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி