TET_பரிதாபங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2026

TET_பரிதாபங்கள்


TET_பரிதாபங்கள்

தேர்வு எழுதியோர் பாவம்தான்...!


ஜூலை 4&5ஆம்  தேதிகளில் நடைபெற்ற சிறப்பு டெட் (Special  TET) தேர்வில் , காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு எழுந்து வந்த 'கூற்று - காரணம்' வகை வினாக்கள், தேர்வர்களுக்கு கூற்றுவனாக(எமனாக)  அமைந்ததைக்  கேள்விப்பட்டிருப்போம். 

அதனை உறுதி செய்ய ஒரு சிறிய சான்று. 

 "கூற்று:

  சரிவிகித உணவு,  சரியான உடல்  வளர்ச்சிக்கும் மற்றும் மனநலத்திற்கும் உதவுகிறது.

காரணம்: 

    சரிவிகித உணவு ,

சரியான உடல் வளர்ச்சிக்கும் மற்றும் மனநலத்திற்கும் உதவுகிறது."


     கூற்று,  காரணம் இரண்டையும் வார்த்தெடுத்த அச்சு போல் ஒரே மாதிரி தந்துவிட்டு,  நான்கு விடைகளில் ஒன்றைத்  தேர்வு செய்யவும் சொல்கிறார்கள்.

    மூன்று மணி நேரத் தேர்வு காலத்தில்,  வாசித்து வாசித்துப்  பார்த்துவிட்டு, சரி - ஆங்கிலத்தில் வாசித்துப்  பார்ப்போம் என்று போனால், அங்கே மிகச் சரியாக Assertion and Reason கொடுத்திருக்கிறார்கள். 

     ஆக, ஆங்கில வழியில் சரியான வினாவைக்  கொடுத்துவிட்டு, தமிழ் வழியில் எழுதுபவர்களைக் காய வைக்கும்- அந்த அபூர்வமான மொழிபெயர்ப்பாளர்கள்/வினாத்தாள் அமைத்தவர்களை நாம் எதுவும்  இங்கே கேட்க முடியாது.  

       ஏன் முடியாது என்கிறீர்களா? வினா விடையில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், ஆங்கில வழியைப்  பார்த்துத்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று disclaimer போடுவார்களே!.

ஏனெனில் இது தமிழ்நாடு அல்லவா.!


     வினாத்தாளை இறுதி செய்வதற்கு முன்பாக, இதுபோன்ற அடிப்படைப்  பிழைகளைச்  சரி செய்வதற்கு, வினாத்தாள் வடிவமைப்பாளர்களுக்கு நேரம் இல்லையா/போதுமான பணியாளர்கள் இல்லையா எனத்  தெரியவில்லை. 

      இது போன்ற போட்டித்/தகுதித் தேர்வுகளை தமிழ் வழியில் எழுதுவதற்கு அசாத்திய மனவலிமையும் துணிச்சலும் வேண்டி இருக்கிறது. தேர்வுக்கு படிப்பதை விடவும் இதுவே முக்கியமானதாகத் தெரிகிறது.

      வருங்காலங்களிலாவது  இதுபோன்ற பிழைகளைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் கவனமுடன் செயல்படக் கோருகிறோம்.

வளநாடு சே. சுப்ரமணியன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி