திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:46 சிற்றினம் சேராமை
குறள் எண்:454
குறள்:
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
பொருள்:
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.
Forgive and forget.
மன்னிப்போம், மறப்போம்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பொது அறிவு மற்றும் நற்பண்புகளால் என்னை நான் உயர்த்திக் கொள்வேன்.
2. என் பெற்றோரையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் எந்த ஒரு செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்.”
Thought for the Day :
✨ “Don’t wait for the right time; make the time right with your effort.”
பொது அறிவு :
1.புலாங்குழலில் மொத்தம் எத்தனை துளைகள் உள்ளன?
7 துளைகள்.
2. உலகில் அதிக நாடுகள் கொண்ட கண்டம் எது?
ஆப்பிரிக்கா.
English words :
Eager - Very interested and excited, ஆர்வமுள்ள.
Fragile - Easily broken or damaged, எளிதில் உடையக்கூடிய
புவியியலும் சுற்றுசூழலும் :
தீவுகள் (Islands) – நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதிகள்.
தீபகற்பங்கள் (Peninsulas) – மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டு, ஒரு பக்கம் நிலத்துடன் இணைந்த பகுதிகள். நமது இந்தியா ஒரு தீப கற்ப நாடு
NMMS :
MAT - MATHS
கொடுக்கப்பட்டுள்ள படங்களில் வேறுபட்டதைத் தேர்ந்தெடு
விடை: (3)
ஜூலை 21
நீதிக்கதை
"அறிவாளி அணிலும் பிடிவாத முயலும்"
ஒரு பெரிய காட்டில் ஒரு பள்ளி இருந்தது. அங்கே ஆந்தை ஆசிரியர் அனைத்து குட்டி விலங்குகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தார்.
ஒருநாள் ஆந்தை ஆசிரியர் கூறினார்:
"நாளை மழை வரும். அனைவரும் குடையோ அல்லது மழைக்கோட்டோ கொண்டு வாருங்கள்."
அணில் ஆசிரியரின் வார்த்தையைக் கேட்டு வீட்டில் சென்று குடையை எடுத்துவைத்தது.
ஆனால் முயல், "ஆசிரியர் எப்போதும் இப்படித்தான் சொல்வார். மழை வராது!" என்று நினைத்து எதையும் எடுத்துச் செல்லவில்லை.
மறுநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில் பலத்த மழை பெய்தது.
அணில் குடையை விரித்து நனையாமல் பள்ளிக்குச் சென்றது.
முயல் முழுவதும் நனைந்து, குளிரால் நடுங்கிக்கொண்டு பள்ளிக்கு வந்தது.
ஆந்தை ஆசிரியர் அன்பாகக் கேட்டார்:
"முயலே! நான் சொன்னதை ஏன் கேட்கவில்லை?"
முயல் தலைகுனிந்து,
"ஆசிரியரே, உங்கள் அறிவுரையை மதிக்கவில்லை. இனிமேல் ஆசிரியர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளைக் கேட்டு கீழ்ப்படிவேன்." என்றது.
ஆந்தை ஆசிரியர் புன்னகையுடன்
"ஆசிரியர்கள் மாணவர்களின் நன்மைக்காகவே அறிவுரை கூறுகிறார்கள். கீழ்ப்படிதல் நம்மைக் காப்பாற்றும்" என்றார்.
கதையின் நன்னெறி:
ஆசிரியர்கள் கூறும் நல்ல அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவது நம்மை பாதுகாத்து, வெற்றிப் பாதையில் நடத்தும்.
இன்றைய செய்திகள்


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி