"வி.ஏ.ஓ. நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2012

"வி.ஏ.ஓ. நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்"

"வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத
இறுதிக்குள் நடக்கும்,'என, டி.என்.பி.எஸ்.சி.,தலைவர், நடராஜ் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும்
என்றும் அவர் கூறினார்.கரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு,சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை வாரியாக பணி ஒதுக்கீடு பணி, டி.என்.பி.எஸ்.சி.,
அலுவலகத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே,
தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான
கலந்தாய்வு நடத்தப்பட்டு,உத்தரவுகள் வழங்கப்பட்டன.இதைத் தொடர்ந்து,இளநிலை
உதவியாளர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு, தேர்வாணைய
அலுவலகத்தில், நேற்று துவங்கியது. அப்போது,
தேர்வாணைய தலைவர் நடராஜ், நிருபர்களிடம்
கூறியதாவது:
இளநிலை உதவியாளர்கள் பணி நியமன கலந்தாய்வு
, 10 நாட்கள் வரை நடக்கும்.தினமும், 300 பேர் வீதம்
அழைக்கப்படுவர். "ரேங்க்"அடிப்படையில்,
அனைவருக்கும், பணி ஒதுக்கீடு வழங்கப்படும். வி.ஏ.ஓ.,பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள்,
நவ.,30ல் வெளியானது.இதையடுத்து, இம்மாத
இறுதியில் இருந்து,கலந்தாய்வு நடக்கும்.அதன்பின், குரூப்-1,குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை,
ஜனவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்
தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி