குரூப்–4 தேர்வு: 2 லட்சம் பேர் எழுதவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2013

குரூப்–4 தேர்வு: 2 லட்சம் பேர் எழுதவில்லை.

குரூப்–4 தேர்வில் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் 14 லட்சம் பேர். அவர்களில் 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினார்கள். ஏறத்தாழ 2 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. கடந்த முறை குரூப்–4 தேர்வு நடந்தபோது 10 ஆயிரத்து 66 பணியிடங்களுக்கு10 லட்சத்து 34 ஆயிரத்து 421 பேர் தேர்வு எழுதினார்கள். ஆனால் இந்த வருடம் அதிகம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். அமைதியான முறையில் நல்லபடியாக தேர்வு நடந்து முடிந்தது.

நாளைக்குள் கீ–ஆன்சர்

26 அல்லது 27–ந் தேதி கீ–ஆன்சர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.அதற்கு அடுத்தபடியாக அனைத்து விடைத்தாள்களும்ஸ்கேன் செய்யப்பட்டு பின்னர் மதிப்பீடு செய்யப்படும். எவ்வளவு விரைவில் முடிவு வெளியிடமுடியுமோஅவ்வளவு விரைவில் வெளியிடப்படும்.3 மாதங்களில்தேர்வு முடிவு வெளியிடப்படும்.மதிப்பீடு செய்யும்போதும் வீடியோ எடுக்கப்படும். மதிப்பீடு முறையாக வெளிப்படையாக செய்யப்படும்.இவ்வாறு நவநீதகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.அவரிடம் இந்த தேர்வில் ஒரே கேள்வி இருமுறை கேட்கப்பட்டதாக புகார் வந்துள்ளதே என்று கேட்டதற்கு. அப்படி எந்த தகவலும் வரவில்லை என்று பதில் அளித்தார்.மேலும் 144–வது கேள்வியில் பொருத்துக என்று கொடுக்கப்பட்டதில், பதில் சரியாக இல்லை என்று கூறப்படுவது பற்றி கேட்டதற்கு, கீ சரிபார்க்கப்பட்டு வெளியிடப்படும் என்றும், தற்காலிக கீ– விடை வெளியிட்ட பிறகு, விடை குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படும்.பின்னர்தான் இறுதி கீ வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி