ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அடுத்த தலைவலி...! உதவி பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அடுத்த தலைவலி...! உதவி பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு...!


அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில்,"நெட்" தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் குறைந்த மதிப்பெண் வழங்குகிறது.

பல்கலை மானியக்குழு விதிக்கு புறம்பான இந்த நியமனங்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்சி., முடித்து விரிவுரையாளர் பணிக்கான, தேசிய தகுதித் தேர்வான - நெட் - தேர்ச்சியடைந்துள்ளேன். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்க மே 28ல், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவிப்பு வெளியிட்டார்.அதில், "உதவி பேராசிரியர் பணிக்கான தகுதிகளாக முதுகலை பட்டம், அதே பாடத்தில், நெட் தேர்வில் தேர்ச்சி அல்லது முதுகலை பட்டம், பிரதான பாடத்தில், பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. பல்கலை மானியக் குழு 2009ல் வெளியிட்ட விதிகள்படி, பிஎச்.டி., முடித்தவர்கள், நெட் எழுதத் தேவையில்லை. மற்ற முதுகலை பட்டதாரிகள் தான், நெட் எழுத வேண்டும்.நெட் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில், முன்னுரிமை வழங்க வேண்டும். நெட் தேர்ச்சியானது, பிரதான தகுதியாகும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில், பிஎச்.டி., முடித்தவர்களின் பெயர்களை நியமனத்தில் பரிசீலிக்கலாம்.ஆனால் நேர்காணலில், பிஎச்.டி., முடித்தவர்களுக்கு அதிக மதிப்பெண், நெட் தேர்ச்சியடைந்தவர்களுக்கு குறைந்தளவு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பல்கலைக் கழக மானியக் குழு விதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றவில்லை. பணி நியமனத்திற்கான தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், நேற்று மனு பரிசீலனைக்கு வந்த போது, அதன் மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.

1 comment:

  1. very good, comparing with net, csir exams PhD is nothing

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி