முதுகலை தமிழாசிரியர் பணி: 694 பேருக்கு அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 24, 2013

முதுகலை தமிழாசிரியர் பணி: 694 பேருக்கு அழைப்பு.


நீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேரில், 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.கடந்த ஜூலை 21ல், தேர்வு நடந்த நிலையில்
தமிழ் அல்லாத பிற பாடங்களின் தேர்வு முடிவு அக்., 7ம் தேதி வெளியானது. வழக்கு காரணமாக தமிழ் தேர்வு முடிவு வெளியாகவில்லை.

நீண்ட இழுபறிக்குப் பின், தமிழ் தேர்வு முடிவை, டி.ஆர்.பி., நேற்று தன் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. தமிழ் பாடத்திற்கு 640 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் 30ம் தேதி வேலூர், விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய ஐந்து இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. ஒரு பணிக்கு ஒருவர் என்ற வீதத்தில், தகுதியானவர் பட்டியலை மதிப்பெண்களுடன் இணையதளத்தில் டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.எனினும் ஒரே பிரிவில், சரி சமமான மதிப்பெண்களை பெற்ற தேர்வரும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி தேர்வெழுதிய 1.6 லட்சம் பேரில், 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தேர்வின் இறுதி விடைகளும் (கீ - ஆன்சர்), டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.முடிவு குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பில், "தற்போதைய தேர்வு, தற்காலிகமானது. இறுதி முடிவு, கோர்ட் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் விண்ணப்பதாரருக்கு, அனுப்பபட மாட்டாது.

இணையதளத்தில் இருந்து, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளது.மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில், தயாநிதி என்பவர் 124 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். செல்வி என்ற தேர்வர் 89 மதிப்பெண் பெற்று கடைசி இடம் பிடித்தார். எழுத்து தேர்வு மதிப்பெண்ணுடன் பணி அனுபவம், பதிவுமூப்பு உள்ளிட்டவற்றுக்காக ஏழு மதிப்பெண் வழங்கப்படும். இரு மதிப்பெண் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

16 comments:

  1. In notification 605 tamil seats but now they recruit 640. am i correct or not?

    ReplyDelete
    Replies
    1. Not correct. Because the candidates who got same marks only called. They can selected with the comparison of their date of birth and other aspects as per govt. terms and condition.

      Delete
  2. Tamilku matum y 40 seats extra p0stings?ella major kumsecond list podunga trb:;:;:;:;........

    ReplyDelete
    Replies
    1. those who have scored last mark will be called and thats why.... extra 35 candidates have been called. Depends upon the extra marks...35 candidates will be eliminated...

      Delete
    2. for tamil only 604 posing was notified but now here said 640 will be selected that means. in which account the extra 36

      Delete
  3. sir, question no.125 question serios D paper II justice S.Nagamuthu kodutha judgement the winds blow from the particular direction answer A,B,D but neenga publish panathu A,B,C. so change it
    sir, question numberum thavaraga pottu ulleer so change it. thank you.
    AnonymousDecember 19, 2013 at 11:08 AM

    kalvi seithiyil thavarana thagaval velivanthullathu justice S.Nagamuthu kodutha judgement copyil A.B.D enru than ullathu question no.125 question serios D the winds blow from the particular direction entra kelvikku A.B.C entru seithi veliaggi ullthu varuthamaga ullathu. so change it.
    Reply

    ReplyDelete
  4. Hearty congratulations to all the PG-Tamil candidates, be ready for CV.

    All the best.

    ReplyDelete
  5. We say our thankful regards to all the educational websites which updated the news in quick.

    ReplyDelete
  6. So B serious TRB tamil candidates yaarukkum extra marks kidayathu! case file panna iruvarukku mattum 21 marks. So TRB oru raanuvam athai yethuthu oru sippai porida mudiyathu appadi thaane. questions 40 kkum mela niraya eluthu pilayoda vanthu athukkum result potta ore Board ulagathuleye TRB mattuma thaan irukkum. Anyway selected candidates kku nenjartha vaalthukkal !
    yaarum inemel melum case podama vittudungapa please.! aduthamurai jeikalam.

    ReplyDelete
    Replies
    1. ok in be serial several questions r printed with spell mistakes.this is mistaken of trb board. this mistake was append unknowingly. as a teacher we should recognize all the mistakes with real meaning ,this is a quality of a teacher. if unable to identify the meanings of all the mistaken questions, how can u make correction if ur students mistake in spelling? all the other candidates r affected by like ur candidates. try to develop ur qualities 1st

      Delete
    2. actually what is ur problem . aviga 2 parukum mark kuduthutagagarathu unaku problema illa unakku mark kudukalagirathu problema? . if ur problem 2nd means read above statement .

      Delete
  7. indha varuda tet eludinavangala 4 groupa pirikkalam. above 90 marks vangi pass anavanga (17000)83 to 89 marks vaangi case podravanga (1500 to 2000) below 83 to 60 mark vaangi adutha tetku wait panravanga (1 lakh)
    60 mark ku kela vaanginavanga( ug mudichu b.ed mudicha 4 lakh candidates) tet nu onu vandhadhe indha 4 lakh candidates aladhan. ida odhikeedil vandha teachers thayarpaduthina indha 4 lakh perdhan tet layum ida odhikeedu kekuranga. edhuku ivangala madiri innum 4 lakh students a create pannava. tet vaalga. valarga arivu saarndha samudhayam.

    ReplyDelete
  8. பள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி களில் கடந்த 2008-09ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் சுமார் 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பதிவுதாரர்கள் அழைக்கப் பட்டிருந்தனர்.

    இந்நிலையில், 136 பின்னடைவு காலியிடங்களை (பேக்லாக் வேகன்சி) ஏற்கெனவே நடத்தப் பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களைக் கொண்டு நிரப்ப அரசு முடிவு செய்தது. (பின்னடைவு காலி யிடங்கள் என்பது, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான இடஒதுக் கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக் காவிட்டால் தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்)

    136 பேருக்கு பணி உத்தரவு

    அதைத்தொடர்ந்து, 2008-09ம் ஆண்டு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் களில் 136 பேரை பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்து அவர்களுக்கு பணி நியமன உத்தரவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக அனுப்பியுள்ளது.

    குறிப்பிட்ட பள்ளியை ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவில், அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் நாளான ஜனவரி 2-ம் தேதி அன்று பணியில் சேருமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    5 ஆண்டு அவகாசம்

    இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அந்த உத்தர வில் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    எதிர்பாராத நேரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து திடீரென நேரடியாக பணி உத்தரவு வந்திருப்பதால் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    இதேபோல், ஏற்கனவே நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் 3,500 இடைநிலை ஆசிரியர் களுக்கு நேரடியாக பணி உத்தரவு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    HINDU TAMIL EDITION NEWS TODAY

    ReplyDelete
  9. TRB PG TAMIL FLASH NEWS


    முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு :கருணை மதிப்பெண் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக்கிளையில் மேலும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன

    ReplyDelete
  10. Why TRB is so urgent called for certificate verification ? If there is any change, the candidates who are going to attend the CV will be disappointed !

    ReplyDelete
  11. Intha flash news kalvi seithi web la thirumpa perapattu vittadhu. kaaranam theriyavillai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி