+1, +2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு 6.5 லட்சம் சைக்கிள்வாங்க டெண்டர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

+1, +2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு 6.5 லட்சம் சைக்கிள்வாங்க டெண்டர்.


மேல்நிலைக் கல்வி கற்கும், மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், வரும், 2014 - 15ம் கல்வியாண்டில், ஆண்டில், 6.5 லட்சம் சைக்கிள்கள் வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், மேல்நிலைக் கல்வி கற்கும், மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வரும், 2014 - 15ல், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த, 2.53 லட்சம் பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த, 1.97 லட்சம் பேர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த, 1.78 லட்சம் பேர், இதர வகுப்பை சேர்ந்த, 15 ஆயிரம் பேர் என, மொத்தம், 6.5 லட்சம் பேருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இலவச சைக்கிள் வாங்குவதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அலுவலகம்சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதம், 15ம் தேதி வரை, டெண்டர் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முதல்வர், ஜெயலலிதா தலைமையிலான அரசு, இப்போதும், பிளஸ் - 1 மற்றும் பிளஸ் - 2 வகுப்புகளில் நடிக்கும், மாணவ மாணவியர், பள்ளிக்கு வந்து செல்ல, சைக்கிள் வழங்கி வருகிறது. மேல்நிலைக்கல்வி என்பது, பிளஸ் - 1 மற்றும் பிளஸ் கூறியதாவது: இது 18 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்னை.

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புப்படி, 23.8.2010க்கு முன் பணி நியமனம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு, டி.இ.டி., தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதற்கான 'தவிர்ப்பாணை', பள்ளிக் கல்வி மூலம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்,என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி