பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கல்வி சார்ந்த அம்சங்கள் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2014

பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கல்வி சார்ந்த அம்சங்கள் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள்.


பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடபான சில முக்கியஅம்சங்கள்:

கல்வித்திட்டம், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்படும்

தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்

அனைவருக்கும் கல்வி திட்டம் - சர்வ சிக்ஷ அபியான்' திட்டத்தை ஆய்வு செய்யவும்,அன்றாட தகவல்களை பதிவு செய்யவும் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

மேலும், கல்வியறிவின்மையை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, அனைவருக்கும் கல்வித் திட்டம் விரிவுபடுத்துவதுடன், வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்

இடைநிலை கல்வி, தனித்திறன் மேம்பாடு ஆகியவற்றை பரவலாக்கி, பள்ளிகள் வாயிலாக, கிராமப்புற, பழங்குடியின மற்றும் பிற சிக்கலான பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

பள்ளிக் கல்வித்திட்டம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, நாட்டின் தேவைக்கேற்ப, ஆற்றல் வாய்ந்த, மன அழுத்தம் இல்லாத, கவர்ச்சியான திட்டமாக மாற்றி அமைக்கப்படும்

பள்ளிக் கல்வியை தொடரவும், இறுதி செய்யவும், பெண் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சிறப்பு ஆசிரியர் திட்டம் ஏற்படுத்தப்படும்

பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், தொழில்நுட்பம் சார் கல்விதிட்டம் ஏற்படுத்தப்படும்

பள்ளியில் தேசிய மின்னணு- நூலகம் (இ - லைப்ரரி) ஏற்படுத்தப்படும்பள்ளி செல்லும் குழந்தைகளின் அறிவுஎல்லையை விரிவாக்கும் விதமாக, நாடுகளுக்கிடையிலான மாணவர்கள்பரிமாற்ற திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாணவர்களின், கற்பனைத் திறன், அங்கீகரிக்கப்படுவதுடன், ஊக்குவிக்கப்படும்.

மின்னணு நிர்வாகம்:அகண்ட அலைவரிசை சேவையின் பயன்பாட்டை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு கிராமத்திற்கும் இந்த சேவை கிடைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்..

கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் பாடப் புத்தக சுமையை குறைக்க, தொழில் ரீதியான புதுமைகள் புகுத்தப்படும்.

அனைத்து கல்வி நிறுவனங்களும், படிப்படியாக இந்த வசதிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

கணினி மூலமான கல்வி மற்றும் பயிற்சிகள் விரிவுபடுத்தப்படும்.

கிராமப்புற மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்க, நடமாடும் உடல்நல சேவைப் பிரிவு துவக்கப்படும்.அரசு ஆவணங்களை கணினி மயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

4 comments:

  1. ithan moolam tet thervargalukku ethavathu bathippu ullatha?

    ReplyDelete
  2. ithanal pani niyamanam thamathamagalam.....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி