கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2014

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் கடந்த 2009-10 ஆண்டில் 6700 மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் 99 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் ராக்கிங் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் கொடுமைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். கல்வி நிலையங்களில் ராக்கிங் கொடுமைகளை தடுக்கும் வகையில் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் சிறார் நீதி சட்டத்திலும் இந்த குற்றங்களை தண்டனைக்கு உரியதாக சேர்க்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை, தீவிர காயமேற்படுத்துதல் மற்றும் மனரீதியான உளைச்சல் ஏற்படுத்துவதற்கும் மூனறாண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இவை தவிர, அக்குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர் உள்ளிட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் இச்சட்டத் திருத்தத்தில் வழிவகை ஏற்படுத்தப்படும்.இந்த திருத்தங்கள் அடங்கிய மசோதா மீது மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று இந்த மசோதாக்கள் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் பெண்கள்மற்றும் குழந்தைகள் நல அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி