அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் என்ஜினீயர் பணிக்கான தேர்வு 50 சதவீதம் பேர் வரவில்லை.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் என்ஜினீயர் பணிக்கான தேர்வு 50 சதவீதம் பேர் வரவில்லை.!


அரசுப்பணியில் 98 என்ஜினீயர்களை நியமிப்பதற்கான தேர்வு சென்னைஉள்பட 15 நகரங்களில் நேற்று நடைபெற்றது.இதில் 50 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.

என்ஜினீயர் பணியிடங்கள் பொதுப்பணித் துறையில் உள்ள நீர் வளத்துறைக்கு 50 சிவில் உதவி பொறியாளர்கள், கட்டிடப் பணிக்கு 21 சிவில் உதவி பொறியாளர்கள், 9 எலெக்ட்ரிக்கல் உதவி பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலை துறையில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பணிக்கு 18 பேர் என மொத்தம் 98 பணியிடங்களுக்கு நேற்று எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 15 நகரங்களில், 176 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 50 மையங்களில் நடந்தது.இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 2 ஆயிரத்து 678 கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். 29 பறக்கும் படையினரும் தேர்வுமையங்களை பார்வையிட்டனர். விரைவில் முடிவு தேர்வு மையங்களான திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.

நேற்று காலை விருப்ப பாடத்தேர்வும், மாலையில் பொது அறிவுக்கான தேர்வும் நடைபெற்றது. வெ.ஷோபனா கூறுகையில், இன்னும் ஒரு வாரத்தில் விடை வெளியிடப்படும் என்றும் எவ்வளவு விரைவாக முடிவு வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடுவோம் என்றார். 50 சதவீதம் பேர் வரவில்லை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்54 ஆயிரத்து 690 பேர்.இவர்களில் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் 53 ஆயிரத்து 555 பேர். ஆனால் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி