ஆசிரியர்கள் இடமாறுதலில்ரூ. 500 கோடி லஞ்சம்: ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

ஆசிரியர்கள் இடமாறுதலில்ரூ. 500 கோடி லஞ்சம்: ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு.


ஈரோட்டில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த கட்சி நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதலில் ரூ.500 கோடிக்கு லஞ்சம் கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு ஆசிரியர்களிடமும் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.ஜெயலலிதா சிறையில் இருந்த போது ஒரே நாளில் இரவோடு இரவாக அரசு துறையில் 3 ஆயிரம் பேருக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளது.

இதே போல்ஒரு தொழிலதிபரிடம் மொத்தமாக ரூ.10 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர் யாரை எல்லாம் சிபாரிசு செய்கிறாரோ அவர்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே இது வித்தியாசமான ஊழலாகும். அரியானா மாநிலத்தில் 1999 மற்றும் 2000ம் ஆவது ஆண்டில் நியமிக்கப்பட்ட 3204 ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிந்தது. இதே போல் தமிழகத்திலும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி