தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2015

தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத்திறன் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்.


தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களிடம், தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன் அதிகரித்துள்ளதாக, தனியார் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.பிரதம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், 2006 முதல் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லுதல்; அவர்கள் கற்றல் திறன் குறித்து ஆய்வுசெய்து, ஏசர் என்ற தலைப்பில் வெளியிடுகிறது.
இந்த ஆண்டு, நாடு முழுவதும், 577 மாவட்டங்கள்; 16,497 கிராமங்களில், மூன்று முதல், 16 வயதுக்குட்பட்ட, 5,70 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு நடந்தது.நாடு முழுவதும் கட்டாய கல்விச் சட்டம் அறிமுகமாகி உள்ள நிலையில், ஏசர் குழு, 15,206 அரசுப் பள்ளிகளையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டது.

தமிழகத்தில் 29 மாவட்டங்கள்; 823 கிராமங்கள்; 17,335 வீடுகள்;3571, 3 - 5 வயதில் 3571; 6 - 14 வயதில்,13, 948; 15 - 16 வயதுடைய 2,674 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு முடிவுகள்:

* 6 - 14 வயதில், பள்ளி சேராத குழந்தைகள் எண்ணிக்கை 2013 ஆண்டை விட, 2014ல் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், தேசிய அளவை விட மிக குறைவாக உள்ளது.

* 6 - 14 வயதில், தனியார் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. 2014ல், 31.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, தேசிய அளவான 30.8 சதவீதம் என்பதைவிட அதிகம்.

* மூன்றாம் வகுப்பு மாணவர்களில், முதல் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்கும் திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை, 2013ல், 29 சதவீதம்; 2014ல், 37.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

* ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்கும் திறன் பெற்றவர்கள் எண்ணிக்கை 2013ல், 31.9 சதவீதம்; 2014ல், 46.9 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

* கணித பாடத்தை படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

* ஐந்தாம் வகுப்பு மாணவர்களின், ஆங்கில வார்த்தைகளை வாசிக்கும் திறன், 2013ல், 57.7 சதவீதம்; 2014ல், 65.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, தேசிய அளவான 49.2 சதவீதத்தை விட அதிகம்.

* மூன்றாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில வார்த்தைகள் வாசிப்பு திறனும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி