தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுஎழுத விண்ணப்பம் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2015

தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுஎழுத விண்ணப்பம் வரவேற்பு


"அரசுத்தேர்வு மூலம், ஜூன், 2015ல் நடக்கும், தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுக்கு, தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயராமன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:
ஜூன், 2015ல் நடக்கும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், விண்ணப்பங்களை இணையத்தில், ஒன்று முதல், நான்கு பக்கம் வரை பதிவிறக்கம் செய்து, தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளை பின்பற்றி, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின், நகலை கண்டிப்பாக இணைத்து, தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், நேரடியாக சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப்கேமரா மூலம் ஃபோட்டோ எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே ஃபோட்டோவுடன் கூடிய விண்ணப்பங்களைபதிவேற்றம் செய்து கொண்ட பின்னர், அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.தனித்தேர்வர்கள் அலைச்சலின்றி, எளிதாக விண்ணப்பத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜனவரி, 19 முதல், 24ம் தேதி மாலை, 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி