தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது: மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது: மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி தகவல்


இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு தனிநபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.மத்திய பட்ஜெட்டில், தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்து நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவித்தார்.

அதே நேரம் தனி நபர்களுக்கு, சில பிரிவுகளில் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்ட போதிலும் அவர்கள் செலுத்தும் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இந்த நிலையில் மத்திய வருவாய்த்துறை செயலாளர் சக்திகாந்த தாசிடம் நிருபர்கள்,வரும் ஆண்டுகளில் தனி நபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுமா? என கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அதிக பட்ச வரியான 30 சதவீதம்என்பது சர்வதேச விகிதத்துக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. இதில் குறைப்பு செய்தால் 30 சதவீதம் என்பதை மட்டும் குறைக்க முடியாது.அதற்கு கீழாக விதிக்கப்படும் 20 சதவீத மற்றும் 10 சதவீத வரியிலும் மாற்றம் செய்யவேண்டி இருக்கும். எனவே அதிகபட்ச 30 சதவீத வரிவிகிதம் இன்னும் குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ந்து நீடிக்கும்.தவிர, தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரி விகிதத்தை குறைத்தது.இவ்வாறு அவர் கூறினார்.

அப்படியென்றால் இன்னும் 3, 4 ஆண்டுகளுக்கு தனிநபர் வருமான வரி விகிதத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லையா? என்ற நிருபர்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சக்திகாந்த தாஸ், ‘‘ஆம். அப்படியொரு எண்ணம் கிடையாது’’ என்று குறிப்பிட்டார்.தற்போது, ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு 30 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு 20 சதவீதமும், ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கப்படுவது, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி