குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2015

குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்


தமிழகத்தில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று தொடங்கியது.சான்றிதழ் சரிபார்க்கும் பணி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது.
590 பேர்அழைக்கப்பட்டுள்ளனர். இதே போல மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் இன்று நடந்தது.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். பின்னர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும். குரூப்–4 தேர்வுமுடிவு இன்னும் 45 நாட்களில் வெளிவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி