தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.15 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2015

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: ஏப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களில் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21-ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.125, பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

இணையதள விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை இணைக்க வேண்டும். இதற்கு தத்தகல் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி