ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி


பி.எட் முடித்த பழங்குடியின பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆசிரியர் பணியில் சேரும் வகையில் அவர்களுக்கு தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முன்வந்துள்ளது.ஏற்கெனவே, பார்வையற்ற பிஎட் பட்டதாரிகளுக்கு இத்தகைய சிறப்பு பயிற்சியை இந்நிறுவனம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:

பி.எட். முடித்த பழங்குடியின பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு40 நாட்கள் இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளோம். எஸ்டி வகுப்பைச் சேர்ந்த பிஎட் பட்டதாரிகள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) தங்கள் பெயரை ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தஇலவசப் பயிற்சிக்கு இதுவரை 200 பேர் பதிவுசெய்துள்ளனர். பயிற்சி வகுப்புகள் “டயட்” நிறுவனத்தில் நடைபெறும்.

இவ்வாறு ராமேஸ்வரமுருகன் கூறினார்.

12 comments:

  1. First This year tet exam confirma

    ReplyDelete
  2. Sc students ku tet cls sonanaka athu pathi athuma solula admin sir pls soluka sir

    ReplyDelete
  3. Sc students ku tet cls sonanaka athu pathi athuma solula admin sir pls soluka sir

    ReplyDelete
  4. Sc students ku tet cls sonanaka athu pathi athuma solula admin sir pls soluka sir

    ReplyDelete
  5. Yerkanave pass pannavangaluke job illa so first 90+ answer pannitu tet exam vakilama vendamanu pakalam

    ReplyDelete
  6. ஏற்கனவே பாஸ் ஆன எங்களுக்கே வேலை இல்ல!!! இதுல அடுத்த டெட்டா??? எப்படி நடத்துவீங்கனு பாக்கலாம். பாஸ் செய்தவர்களை ஒன்றினைத்து போராட்டம் நடத்தப்படும். டெட் நடத்தவிடமாட்டோம்.

    ReplyDelete
  7. hai prabu, nanum madurai, 86 mark call to my no. 9994549014

    ReplyDelete
  8. hai friends pass pannavangalukae velaiya kanuma ithula vera coaching classama ........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி