பவுன் விலை ரூ.18,752 ஆக சரிவு: நகைக் கடைகளில் விற்பனை 40% அதிகரிப்பு - அலைமோதும் மக்கள் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2015

பவுன் விலை ரூ.18,752 ஆக சரிவு: நகைக் கடைகளில் விற்பனை 40% அதிகரிப்பு - அலைமோதும் மக்கள் கூட்டம்

கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக பவுன் விலை நேற்று ரூ.18,752 ஆக குறைந்தது. தொடர் விலைச் சரிவு காரணமாக, மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தமிழக நகைக் கடைகளில் வியாபாரம் 40 சதவீதம் அதிகரித்திருக்கிறது.இந்த வாரத் தொடக்கத்தில் இறங்குமுகமாக இருந்த தங்கத் தின் விலை நேற்று முன்தினம் சற்று உயர்ந்தது.


ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,380-க்கும் ஒரு பவுன் ரூ.19,040-க்கும் விற்பனையானது.இந்நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் சரிந்தது. நேற்று காலையில் 22கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.28 என பவுனுக்கு ரூ.224 குறைந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.2,352-க்கும், ஒரு பவுன் ரூ.18,816-க்கும் விற்பனையானது.
மாலையில் கிராமுக்கு ரூ.8-ம் பவுனுக்கு ரூ.64-ம் குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.2,344-க்கும், ஒரு பவுன் ரூ.18,752-க்கும் விற்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பவுன் தங்கம் இந்த அளவுக்கு விலை இறங்கியது இதுவே முதல் முறை.

24 கேரட் சுத்தத் தங்கம் (10 கிராம்) நேற்று முன்தினம் ரூ.25,450-க்கு விற்பனையானது. இது நேற்று காலை ரூ.300 குறைந்துரூ.25,150-க்கும், மாலையில் மேலும் ரூ.150 குறைந்து ரூ.25,000-க்கும் விற்கப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பிறகு..

தங்கம் விலை சரிவால் நகைக் கடைகளில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கிறது.

இதுகுறித்து மெட் ராஸ் தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் மாநிலசெயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததன் தொடர்ச்சி யாகவே இந்தியாவிலும் விலை குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டு களுக்கு பிறகு, ஒரு பவுன் ரூ.18,752 என்ற அளவுக்கு இறங்கியுள்ளது.மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந் துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவதால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நகைக் கடைகளில் வியாபாரம் 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள் ளது. மக்களின் வசதிக்காக, கடைகள் திறந்திருக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி