'கை'க்கு எட்டாத சிறப்பு கல்வி ஊக்கத்தொகை இரண்டு ஆண்டாக மாணவர்கள் தவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2015

'கை'க்கு எட்டாத சிறப்பு கல்வி ஊக்கத்தொகை இரண்டு ஆண்டாக மாணவர்கள் தவிப்பு

அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல், இரண்டு ஆண்டாக லட்சக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றலை தடுக்கும் நோக்கில், முதல்வர் ஜெ., 2011ல் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கினார்.


அதன்படி, மாநில அளவில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் ௧ வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா 1,500 ரூபாய், பிளஸ் 2 வகுப்பிற்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கி வருகின்றனர்.இதற்காக, அந்தந்த பள்ளிகளில் 10 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலுடன், அவர்களது வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை சேகரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் வழங்குவர். அங்கிருந்து, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனியார் 'பைனான்ஸ்' நிறுவனத்திற்கு மாணவர்கள் பெயர் பட்டியல், வங்கி கணக்கு எண் அனுப்பப்படும். ஆண்டு தோறும் அரசுநேரடியாக தனியார் 'பைனான்ஸ்' கம்பெனிக்கு சிறப்பு ஊக்க தொகையை ஒதுக்கும். அவர்கள் பாரத ஸ்டேட் வங்கி மூலம் அந்தந்த மாணவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கிற்கே செலுத்திவிடும்.

இந்நிலையில், கடந்த 2010 முதல் 13ம் ஆண்டு வரை ௧௦ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த பெரும்பாலான மாணவர்களுக்கு, அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து மாணவர்கள் பள்ளிகளில் சென்று கேட்டால், சி.இ.ஓ., அலுவலகத்திற்கு செல்ல கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களாக மாணவர்கள் புகார் தெரிவித்தும் சிறப்புஊக்கத் தொகை வரவில்லை.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சி.இ.ஓ., அலுவலகங்களில் இருந்து மாணவர் பெயர், வங்கி சேமிப்பு கணக்கு எண்களை பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பிவிடுவோம். தனியார் 'பைனான்ஸ்' நிறுவனம் அரசிடம் நிதியை பெற்று மாணவர்கள் வங்கி கணக்குக்கு செலுத்துவர். வங்கியில் 'ஜீரோ பேலன்ஸ்' வங்கி கணக்கு துவக்க கூறுகின்றனர்.ஆனால், மாணவர்கள் அதில் குறைந்தது 500 ரூபாயாவது வைத்து கணக்கை நடப்பில் வைத்திருந்தால் மட்டுமே, வங்கி கணக்கு செல்லுபடியாகும். இல்லாவிட்டால் வங்கி கணக்கை ரத்து செய்து விடுகின்றனர். இது போன்ற நிலை மாநில அளவில் நிலவுவதால் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வரவில்லை. அரசு தான் முடிவு எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி