IGNOU நுழைவுத்தேர்வு: 90 சதவீதம் பேர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

IGNOU நுழைவுத்தேர்வு: 90 சதவீதம் பேர் பங்கேற்பு

மதுரை:மதுரை மண்டலத்தில், 'இக்னோ' நடத்திய பி.எட்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.15 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நுழைவுத் தேர்வு, மதுரை உட்பட ஒன்பது மாவட்ட மையங்களில் நேற்று நடந்தன.90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.


தேர்வு பணிகளை, மண்டல இயக்குனர் மோகனன் தலைமையிலான பேராசிரியர் குழுக்கள் கண்காணித்தன.மோகனன் கூறுகையில், "இந்தாண்டு முதல் புதிய நடைமுறையாக பி.எட்., படிப்பில் சேர, ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே இருந்த 'பட்டப் படிப்புடன் 2 ஆண்டுகள் ஆசிரிய ராக பணி அனுபவம் இருக்க வேண்டும்' என்பது எடுத்துக்கொள்ளப்படவில்லை," என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி