நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2015

நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

சென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர் – ஆசிரியைகள் திரண்டு வந்திருந்தனர்.போராட்டம் குறித்து ஜாக்டோவின் உயர்மட்ட குழுஉறுப்பினர் எஸ்.சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:–


ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த போதிலும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளை மூடிவிட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பெரும்பான்மையான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் வகுப்புகள் நடைபெறவில்லை. நவம்பர் 2–வது வாரத்துக்குள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் நவம்பர் இறுதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.எங்களது போராட்டத்தினால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தி சரி செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வாசுதேவன், சொர்ண லதா, உதயகுமார், எஸ். காயத்தாறு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

11 comments:

  1. 14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.3 பருவங்களாகப் புத்தகங்கள் வழங்கப் படுகின்றன.ஆனால் இவற்றைஎல்லாம் ஆசிரியர்கள் தாம் எடுத்து வரவேண்டியுள்ளது.இதற்குத் தனியாக நியமனம் செய்யுங்கள் என்கிறார்கள்.இப்படி14 வகையான க் கோரிக்க்கை உள்ளபோது எதோ ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடுவது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது.

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய அம்மா! கடநத 5 வருடங்களாக கேட்கிறோம். தருவதாக உறுதி அளித்ததை தானே கேட்கிறோம். நிதி இப்போது இல்லை அதுவும் எங்களுக்கு மட்டும் இல்லை எனறு 5 வருடங்கள் கடந்து கூறுகிறீர்களே..

    ReplyDelete
  3. டிசம்பருக்குள் எங்களுக்கும் தீர்வு காணாவிட்டால் நாங்களும் காலவரையற்ற உண்ணாவிரததத்தை ஆரம்பிப்போம்..

    ReplyDelete
  4. when 2010 cv case judgement anybody know ?

    ReplyDelete
  5. What about supreme court tet case?

    ReplyDelete
  6. காலவரையறையற்ற போராட்டம் தான் சரி வரும் .விரைவில் அறிவிக்க வேண்டும்

    ReplyDelete
  7. When will publish notification for TRB govt polytechnic college lecturer Exam 2015? please reply to me anybody...

    ReplyDelete
  8. Pg Trb seekiram announce pannunga why late?

    ReplyDelete
    Replies
    1. அறிவிப்பு வரும் விரைவில். தேர்வை எதிர் கொள்ள நீங்கள் தயார் நிலையில் உள்ளீர்களா ?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி