பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2015

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழ்நாடு சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சங்கத் தலைவர் பி.வடிவேல்முருகன்உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:


தமிழகத்தில் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்விகற்பிக்கும் திறன் கொண்ட சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் சுமார் 5000 பேர் உள்ளனர். சிறப்பு கல்வியியல் (ஸ்பெஷல் பிஎட்) பட்டத்தை இந்திய மறுவாழ்வு குழுமம் அங்கீகரித்துள்ளது. சிறப்பு பள்ளிகள் மட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் கல்விக்காக ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கல்வியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு 30.1.2015-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் இந்த அரசாணையை 2015-16 கல்வி ஆண்டில் அமல்படுத்தக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் உள்ளது.இந்நிலையில், பார்வையற்றோர் பள்ளி மற்றும் காதுகேளாதோர் பள்ளிகளில் பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் 26.11.2015-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இப்ப ணியிடத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டம் குறிப்பிடப்படவில்லை.


இது பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவுக்கு எதிரானது.இதனால் பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க் கவும், இப்பணியிடத்தில் சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கவும் கோரி மனு அளித்தோம். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என வே, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, பார்வைற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியில் சிறப்பு கல்வியியல் பட்டத்தை சேர்க்கவும், பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.முனிராஜ் வாதிட்டார். இதையடுத்து, பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான பள்ளிக் கல்வித் துறை அரசாணை மற்றும் இந்திய மறுவாழ்வு குழுமத்தின் உத்தரவை கருத்தில் கொண்டு, மனுதாரர் 1.12.2015-ல் அனுப்பிய மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலனை செய்து 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தர விட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி