7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2015

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது - தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது.


இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.


தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம்அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

24 comments:

  1. Election is nearing ....so everything is in our hands ....B Kool

    ReplyDelete
  2. Absolutely correct.
    Our future is in ourselves...

    ReplyDelete
  3. Let's ask those governments to stop revision of MLA, MP salaries

    ReplyDelete
  4. இந்த ஆட்சி திரும்பவும் அமைந்தால் அரசு அலுவலர்களுக்கு நிதி நிலைமை சரியில்லை என காரணம் சொல்லப்பட்டு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு கசப்பு மருந்து நிச்சயமாக ஊட்டப்படும்....(அரசின் வருவாயில் 80% அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவாகிறது என்ற மாபெரும் பொய் விளக்கமும் முழுப்பக்க அளவில் தினமலர்,தினமணியில் வெளியாகும்)விழிப்பாக இருந்தால் நாம் இந்த பேராபத்தில் இருந்து தப்பிக்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சில வருடங்களுக்கு முன்பு இந்த அம்மாவின் ஆட்சியில்தான் அரசு
      வேலைக்கு ஐந்தாண்டு தடை ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. அதனால் அரசு வேலை இழந்தோர்
      பலர் இவர் இதையும் செய்வார் எதையும் செய்வார்.தயாராக இருக்க வேண்டும்.

      Delete
  5. அரசு ஊழியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்....

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Replies
    1. Varumnu innamum tha namburigala

      Delete
    2. Praba, You've already got selected in the last year trb know!!

      Delete
  9. Feb end election date announced...there is any possibility for notification to be released?

    ReplyDelete
  10. அப்போ இனி Trb exam பற்றி கனவு காண்பது ஏமாற்றமா?

    ReplyDelete
  11. no exam.only election.next government will decide it.

    ReplyDelete
  12. அனைவருக்கம் வணக்கம்.
    இவன.். www.alltrstnsiva.blogspot.in.

    ReplyDelete
  13. போராட்டம் குறித்த உடனடி தகவல்களுக்கு www.karumpalakai.in காணவும்.

    ReplyDelete
  14. This govt power up to Feb.next govt will decide

    ReplyDelete
  15. This govt power up to Feb.next govt will decide

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி