இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2017

இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாவட்டத்தில் இதுவரை தையல் இயந்திரம் பெறாத மாற்றுத்திறனாளிகள் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி,வருமான வரம்பு இல்லை. வயது 18 முதல் 45 இருத்தல் வேண்டும்.அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் இருந்துதையல் தெரியும் என்று சான்று பெற்றிருக்க வேண்டும்.

 இத்தகுதி உடையவர்கள் வெள்ளைத்தாளில் விண்ணப்பம் எழுதி மேற்குறிப்பிட்ட தகுதிகளின் நகல்களுடன், ‘மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், டி.எம்.எஸ்.வளாகம், சென்னை- 600 006’ (தொலைபேசி எண்: 044 – 24315758) என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி