டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு: அண்ணா சாலையில் மாணவர்கள் திடீர் மறியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2017

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு: அண்ணா சாலையில் மாணவர்கள் திடீர் மறியல்

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கடைசி நாள் கலந்தாய்வில் பங்கேற்க வந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் அண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கடைசி நாள் கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான (பிசி) அழைப்புக் கடிதம் பெற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோருடன் கலந்தாய்வில் பங்கேற்ற வந்திருந்தனர்.ஆனால், பிசி பிரிவினருக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இன்று எம்பிசி பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.இதையடுத்து அவர்களை போலீஸார் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர். மாணவர்கள் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பிசி பிரிவினருக்கான இடங்கள் அனைத்து நிரம்பிவிட்டன. அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். அதை பார்க்காமல் மாணவர்களும் பெற்றோரும் வந்துவிட்டனர். இதுபற்றி அவர்களிடம் நாங்கள் விளக்கமாக சொல்லிவிட்டோம்” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி