தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வு!- நாளை முதல் அமலுக்கு வருகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2018

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வு!- நாளை முதல் அமலுக்கு வருகிறது


தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.3-லிருந்து ரூ.5 ஆக உயர்கிறது.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு நாளை (20-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

உயர்த்தப்பட்ட கட்டண விவரம்:-

மாற்றியமைக்கப்பட்ட புறநகர் மற்றும் மாநகரப் பேருந்துக் கட்டண விவரம்:-மாநகர வால்வோ பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்சக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயருகிறது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பேருந்துக் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டண உயர்வை அறிவித்தன. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் இப்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் குறைவு தான் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

புதிய பேருந்துகள் வாங்குதல், எரிபொருள் செலவு, பணியாளர் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதை தவிர்க்க முடியாததாகி விட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.புதிய கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி