'காஸ்ட்லி' ஆகிறது இலவச எல்.கே.ஜி.,! வருமான சான்றிதழுக்கு வசூல் வேட்டை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2018

'காஸ்ட்லி' ஆகிறது இலவச எல்.கே.ஜி.,! வருமான சான்றிதழுக்கு வசூல் வேட்டை

இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க, வருமான சான்றிதழ் வாங்கி தருவதாக, சில இடைத்தரகர்கள், வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதால், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணமின்றி படிக்கலாம்.

இதற்கு தமிழகம் முழுக்ககடந்த, 20ம் தேதி முதல், 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. கல்வி இணையதளத்தில், (www.dge.tn.gov.in) அந்தந்த மாவட்டத்திற்கு தனியாக, மெட்ரிக் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இதில், குடியிருப்பின் அருகாமையில் உள்ள, ஐந்து பள்ளிகளை பெற்றோர் தேர்வு செய்யலாம். ஏதேனும் ஒரு பள்ளியில் அட்மிஷன் உறுதி செய்யப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்கும் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு, வருமான சான்றிதழ் தேவையில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கியோராக இருந்தால், ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருப்பது அவசியம். இதற்கு, வருமான சான்றிதழ் பெறும் நடைமுறைகள், ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. அனைத்து இ -சேவை மையங்களிலும், விண்ணப்ப கட்டணம் செலுத்தினால், 15 நாட்களில், இச்சான்றிதழை இலவசமாக பெற முடியும்.இதற்காக தகவல் வேண்டி, இ - சேவை மையம் செல்வோரை, இடைத்தரகர்கள் சூழ்ந்து கொண்டு, விரைவில் சான்றிதழ் பெற்று தருவதாக கூறி, வசூல் வேட்டை நடத்துவதாக, புகார் எழுந்துள்ளது.

பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'இ - சேவை மையங்களில் விண்ணப்பித்தால், விரைவில் சான்றிதழ் பெற முடியாது என கூறி, இடைத்தரகர்கள் மூளைசலவை செய்கின்றனர். படிக்க தெரியாதவர்கள், வீண் அலைச்சலுக்கு பயந்து, பணம் கொடுக்கின்றனர். இடைத்தரகர்கள் மூலமாக, இ - சேவை மையத்தை அணுகுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உரிய துறை அதிகாரிகள், இ - சேவை மையங்களில் ஆய்வு நடத்தினால், பொதுமக்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் இருக்காது. மே 18ம் தேதி வரை மட்டுமே, இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க இயலும். எனவே, சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகளை, துரிதப்படுத்த வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி