அரசு பள்ளிகளில் இலவச வைஃபை வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2018

அரசு பள்ளிகளில் இலவச வைஃபை வசதி

தமிழகத்தில் முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச வைஃபை வசதி வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ரூ. 9.06 கோடி மதிப்பில், இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது. இதில் முதல்கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.1.23 கோடி செலவில், வைஃபை வசதியை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்தச் சேவையை வழங்க,"டெண்டர்' கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில் பள்ளிகளுக்கு இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றனஎன்றனர்

2 comments:

  1. Respected Minister Sir, All things are OK, but the fundamental thing is to teach the subject (computer science.)Pls recruit the B.Ed., completed computer science teachers in Govt schools.

    ReplyDelete
  2. வைஃபையோ,ரோபோடிக்ஸ்ஸோ எந்த கணினி தொடர்பான தொழில்நுட்பத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல smart classஐஇயக்கவும், கணினி பாடப்பிரிவு ஐ மாணவர்களுக்கு எளிதாக விளக்கி பாடம் நடத்தவும், கணினி ஆய்வகங்களை பராமரிக்கவும்,கணினி தொடர்பான கல்விசார் பதிவேடுகளை முறையாக பராமரித்து வைக்கவும்
    17வருடங்களுக்குமேலாக
    B.EDமுடித்துஇருக்கும் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை யை அதிகமாப்படுத்தலாம்..
    ....

    அரசுப்பள்ளிகளில் கணினிமயமாகவிடாமல் , அரசு ப்பள்ளியின் தரத்தை உயர்த்தவிடாமல் தடையாக இருப்பது "அரசின் கொள்கை முடிவு" அந்த கொள்கை தான் என்ன என்று பலமுறை கேட்டாலும் கிடைக்கும் பதில்_----------??????தனியார்பள்ளிகளிலும் மட்டும் இருக்கும் கணினிஅறிவியலை அரசுப்பள்ளியில்கொண்டுவந்தால் அரசு ப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும்என்ற உண்மையை உணர்ததாலோ என்னவோ அரசுப்பள்ளியில் கணினி மயமாக்கப்பட்டால் இருப்பதையே கொள்கையாக கொண்டுள்ளது அரசு....
    அண்டை மாநிலமான கேரளாவில்,ஆந்திரா போன்ற மாநில கண்களில் கூட அனைத்து வகுப்புகளை யும் கணினி மயமாக்கி முன்னேறி கண்கொண்டு இருக்கின்றார் கள்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி