2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2018

2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை?


தமிழக அரசு, 2019ல், நடப்பு ஆண்டை போல, 23 நாட்களை, பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

தமிழக அரசு, 2015ல், 24 நாட்கள்; 2016ல், 23; 2017ல், 22; 2018ல், 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த, 2019ம் ஆண்டிற்கும், நடப்பு ஆண்டை போல, 23 நாட்களை, பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.பொது விடுமுறை நாட்களில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும். அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள். மூன்று ஞாயிறு, இரண்டு சனிக்கிழமைகளிலும், பொது விடுமுறை வருகிறது.ஜனவரியில், மூன்று நாட்கள்; அக்டோபரில், இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அரசு அறிவித்துள்ள, பொது விடுமுறை நாட்களில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை கழித்தால், 18 நாட்கள், பொது விடுமுறை நாட்களாக உள்ளன.

அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி : ஆயுத பூஜை திங்கள் கிழமை, விஜயதசமி செவ்வாய் கிழமை வருவதால், சனி, ஞாயிறு சேர்த்து, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இது, அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தீபாவளி ஞாயிறன்று வருவது, ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை? :

அடுத்தாண்டு, பொங்கல் பண்டிகை, ஜன., 15 முதல், 17 வரை கொண்டாடப்படுகிறது. இதற்கு, செவ்வாய் முதல் வியாழன் வரை, மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஜன., 12ல், தேசிய இளைஞர் தின விடுமுறை. நடுவில், ஜன., 14 திங்கள் மற்றும் ஜன., 18 வெள்ளி என, இரு நாட்கள் வேலைநாட்களாக உள்ளது.எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை குளிர்விக்கும் வகையில், தமிழக அரசு ஜன., 14, 18 என, இரு நாட்களும் உள்ளூர் விடுமுறை அறிவித்தால், அரசு ஊழியர்களுக்கு, தொடர்ந்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதை அரசு பரிசீலிக்குமா என, ஊழியர்கள் இப்போதே கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 comments:

  1. இப்ப புரியுதா பள்ளி யாருக்காக என்று

    ReplyDelete
    Replies
    1. Not only school/teachers,,
      For All govt faculties

      Delete
  2. They Don't want to go to school and may get salary from their homes

    ReplyDelete
  3. If government school teachers propose good schemes to promote children's education ,it will be appreciated.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி