இன்று ( 25.03.2019) விசாரணைக்கு வந்த ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு பின்பு 08.04.2019-க்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2019

இன்று ( 25.03.2019) விசாரணைக்கு வந்த ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு பின்பு 08.04.2019-க்கு ஒத்திவைப்பு.


ஜாக்டோ ஜியோ வழக்கு 25.03.2019 விசாரணைக்கு வந்தது.

1.  அரசு தரப்பில் நமது கோரிக்கைகளுக்கு lமீண்டும் பதில் தர 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.

2.  போராட்ட காலத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுநாள்வரை மீளப் பணியமர்த்தப்படாத மீன்வளத்துறை ஊழியர் திரு. சின்னச்சாமி அவர்களை மீளப் பணியமர்த்துவது குறித்த அறிக்கையினை வழக்கின் அடுத்த விசாரணையில் அரசு தரப்பு தாக்கல் செய்யும்.

3. 17பி குற்றச்சாட்டு பெற்று வரும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறுவோரின் பட்டியலைப் பெற்று, அவர்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக தமிழக அரசு அடுத்த விசாரணையில் தனது பதிலை தாக்கல் செய்யும்.

4.  அடுத்தகட்ட விசாரணையின்போது இதுவரை பணியில் சேர்த்துக் கொள்ளப்படாமல் தற்காலிக பணிநீக்கத்தில் இருக்கும் மீன்வளத்துறை ஊழியரை மீளப் பணியமர்த்துவது, 17பி குற்றச்சாட்டுகளை இரத்து செய்வது, பணிமாறுதல்களை இரத்து செய்வது, வேலைநிறுத்த காலத்தில் மறுக்கப்பட்ட ஊதியம்  ஆகியவை தொடர்பாக,   வரும் 8.4.2019 அன்று அடுத்த கட்ட விசாரணையின் போது  பரிசீலிக்கப்படும்  என நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இவண்
ஜாக்டோ ஜியோ

1 comment:

  1. எல்லோரும் செத்த பிறகும் விசாரணை நடக்கும்.....விரைவில் 16ம் நாள் துக்கம் கொண்டாட இருக்கும் அரசுக்கு 15 நாள் அவகாசம் எதற்கு.......

    நீதி தாமதமானாலும் அனைவரின் குடும்ப சாபம் சும்மா விடாது.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி