தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்! - kalviseithi

Mar 25, 2019

தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் கடும் கண்டனம்!


தேர்வுத்துறைக்கு கணித ஆசிரியர்கள் சார்பாக கடும் கண்டனத்தை பதிவிடுகிறேன். இன்றைய கணித வினாத்தாள் மாணவர்களை மட்டுமல்ல, மாணவர்களையும் கலக்கமடைய செய்துவிட்டது. முதன்முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை அச்சமடையவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது.

பொதுவாக 50% எளிமையாகவும், 30% சராசரியாகவும், 20 % கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால் வினா தயாரித்தவர் தனது திறமையை வினா வடிவமைப்பில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் வராத வினாக்களாக 5 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் உள்ளன. 1 மதிப்பெண் வினாவும் அப்படியே . மெல்லக்கற்கும், சராசரி மாணவர்களை கலக்கமடைய செய்துள்ளது இந்த கணித வினாத்தாள் . ஒவ்வொரு பள்ளியிலும் சனி, ஞாயிறு, காலை, மாலை வகுப்புகள் அதிகம் எடுக்கும் கணித ஆசிரியர்கள் வேதனைப்படுகிறோம். நினைத்துப் பாருங்கள். மற்ற பாடங்களில் 90,95 மதிப்பெண் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும் போது, கடின உழைப்பு செய்த கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை எங்களுக்கு தான் தெரியும். இனியாவது தேர்வுத்துறை திருந்துமா?

19 comments:

 1. மெல்ல கற்கும் மாணவர்களின் எதிர்காலம் பற்றி கவனம் கொள்ளாத தேர்வுத்துறைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன் ....

  ReplyDelete
  Replies
  1. ஐயா சென்டம் மட்டுமே குறையலாம்.இங்கு கூறப்பட்டுள்துபோல் தேர்ச்சி அடையாமல் போக வாய்ப்பில்லை. 3 ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே சிந்தனையைத்தூண்டும் விதமாக இருந்தது.

   Delete
 2. அனைத்து வினாக்களும எளிதாகவா கேட்க முடியும்????

  ReplyDelete
  Replies
  1. 50% easy 30% average 20% tough read the topic closely and enter ur cmts

   Delete
  2. 50% easy 30% average 20% tough read the topic closely and enter ur cmts

   Delete
  3. 50% easy 30% average 20% tough read the topic closely and enter ur cmts

   Delete
 3. தரமான கல்விக்கு தரமான வினாத்தாள் அவசியம்

  ReplyDelete
  Replies
  1. 35 மதிப்பெண் வாங்கும் அளவுக்கு எளிதாக எடுத்து ,மீதி வினாக்கள் கடினமாக இருந்தால் யார் கவலை பட போகிறார்கள்...

   Delete
  2. Neengal sslc padikkumpothu ippadi solliirunthal paravaillai, nama padikkumpothu ellam easya varanum aduthavan eppadi ponal enna

   Delete
 4. Tharamana kalvi endral eppadithan erugum

  ReplyDelete
 5. English medium 31st question wrong printing

  ReplyDelete
 6. A quality question is that gives an opportunity for everyone to pass and not to dates everyone.

  ReplyDelete
 7. Neengal sslc padikkumpothu ippadi solliirunthal paravaillai, nama padikkumpothu ellam easya varanum aduthavan eppadi ponal enna

  ReplyDelete
 8. கட்டாய வினாக்களும் எளிமையாகவே இருந்தது. Creative வினாக்கள் (ஒரு மதிப்பெண்)3 மட்டுமே தான் அதிலும் ஒரு வினா மட்டுமே சற்று கடினம்.எடுத்துக்காட்டு வினாக்களே அதிகமாக கேட்கப்பட்டது அதனால் தேர்ச்சி அடையாமல்போக வாய்ப்மிவாய். கணிதத்திற்காக போராடுபவர்கள் ஏன் ஆங்கில பாடத்திற்காக குரல் கொடுப்பதில்லை? ஒவ்வொரு முறையும் 35-45 மதிப்பெண்கள் மட்டுமே புத்தகத்தில் இருந்து வினாக்கள் வருகிறது. ஆங்கிலத்தில் ஏன் சென்டம் வருவதில்லை என்று ஏன் யாரும் கேட்பதில்லை? இரண்டாம் தாள் poem paraphraseல் கல்லூரி முதலாமாண்டு பாடத்தில் இருந்து வந்திருந்தது. யாரிடம் இதைக்கூறுவது? ஆங்கிலத்தில் 50%-60% கிரியேட்டிவ் வினாக்கள் மட்டுமே உள்ளது. இரண்டு மதிப்பெண் வினாக்களில்கூட இதே நிலைதான். இதேபோல் கிரியேட்டிவ் வினாக்கள் மற்ற பாடங்களில் இருக்குமா என்றால் இருக்காது. மெல்லக் கற்கும் மாணவர்கள் எப்படி பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுத முடியும்? இதற்காக யாரும் பேசுவதில்லை. வருடாவருடம் 60ஆயிரம் முதல் 1லட்சம் சென்டம் வரும் கணிதம் கடினமாக இருந்தது என்று கூறுகிறீர்கள்.

  ReplyDelete
 9. எது தரமானக்கல்வி?

  ReplyDelete
 10. போகப்போக பழகிவிடும்

  ReplyDelete
 11. தரமான வினாத்தாள் சரி ஆனா 8 வரை ABC தெரியாதர்கள் 9th வந்தா எப்படி Evry year fail. Pana than correct

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி