TRB - போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை: மதிப்பெண் முறைகேடுகளை தடுக்க திட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2019

TRB - போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை: மதிப்பெண் முறைகேடுகளை தடுக்க திட்டம்!


மதிப்பெண் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர்த்து பிற போட்டித்தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த ஆசிரியர் தேர்வுவாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு (தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிதாக போட்டித் தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மதிப்பெண் குளறுபடி மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எவ்வித புகாருக்கும் இடம் தராமல் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.இதையடுத்து விரைவில் நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்படவுள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறியது:   பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டார கல்வி அலுவலர் தேர்வு), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனவிரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு குறைந்த  எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள்.

எனவே சூழலைப் பொருத்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும்,டெட் தேர்வு போன்ற அதிக விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளை வழக்கம்போல் ஓஎம்ஆர் ஷீட் முறையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என்றனர்.

11 comments:

  1. மதிப்பிற்குரிய மாணவர்களே /ஆசிரியர்களே /பொதுமக்களே ! இத படிக்காம போகாதீங்க ப்ளீஸ் !!!


    பள்ளிக்கூட ஆசிரியர்களான நாங்க எங்களோட கஷ்டத்த ஷேர் பண்ணுறோம் !!!😢😢😢


    நண்பர்களே ! நாங்க சுமார் 4500 பேர்க்கு மேல மதுரை காமராஜ் பல்கலைக்கழத்துல 2001 -2016 வரைக்கும் M.Sc(CS and IT) படித்தோம் ,சுமார் 2000 பேர்க்கு மேல B.Ed முடிச்சிருக்கோம்.இப்ப நாங்க TRB Computer Instructor Grade-I க்கு Apply கூட பண்ணமுடியால.MCA/M.SC(CS)/M.SC(IT) மட்டும் Apply பண்ணலாம்.நாங்க எல்லாரும் இப்ப பள்ளிக்கூடம்/கல்லூரி வேலை பார்த்துட்டு இருக்கோம்.நாங்க படுச்சது M.Sc(CS) Syllabus தான் பெயர் மட்டும் M.Sc(CS and IT) .

    இத ஏன் MKU நடத்தணும்?Board Of studies என்ன பண்ணுச்சு ?Acadamic Council என்ன பண்ணுச்சு ? இதுக்கெல்லாம் ஒரு பதிலும் இல்ல .M.Sc(CS and IT) கொண்டு வந்தவுங்க படுச்சவுங்களா? பணத்த கொடுத்து வேலைக்கு வந்த பேராசிரியர் எப்படி இருப்பாங்கன்னு நினைக்க தோணுது.பேராசியர்களே இப்படி பண்ற போது மத்தவுங்ககிட்ட நல்லத எப்படிஎதிர்பார்க்கமுடியும்?


    நாங்க என்ன பண்ணுறதுன்னு தெரியல.குடும்பத்த விட்டுட்டு கோர்ட்டு கேசுன்னு அலைய முடியல ,பொருளாதார வசதியும் இல்ல,எங்களுக்கு மனஉளைச்சல் தான். கல்லூரி-யூனிவர்சிட்டியா கேட்கசொல்லுது, யூனிவர்சிட்டிஅரச கேட்கசொல்லுது M.Sc(CS and IT) கொண்டு வருவத ஓரே ஒரு நல்ல ஆசிரியர் நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம்.ஒரு தவறு இப்ப எங்களோட வாழ்க்கைய பாதிக்குது.அதுவும் கல்விக்கு பெயர்போன காமராசர் பெயர வச்சிருக்குற MKU இப்படி பண்ணிருக்குறதுதான் கொடுமையிலும் கொடுமை.

    இத படிக்குறவுங்க மற்ற Group க்கு ஷேர் பண்ணுங்க.இது கண்டிப்பா ஒரு நல்ல ஆசிரியர்/வழக்கறிஞர்/நீதிபதி/அரசியல்வாதி/காவல்துறை/பொதுமக்கள இது போய் சேரும்.இதனால எங்களுக்கு நல்லது கூட நடக்கலாம் அவங்க ஏமாறுவதை கூட தடுக்கலாம்..ப்ளீஸ் உங்களோட ஒரு ஷேர் எங்களுக்கு உதவலாம் ப்ளீஸ். 🙏தயவு செய்து எல்லாரும் மெயின் subject படிங்க.Ex: B.Com, B.Sc(Botany,Zoology,Chemistry,Physics,Computer Science) படிக்கலாம் ,B.Com(IT),B.Sc(Software System) போல mixed வேண்டவே வேண்டாம்.



    இத படிக்குற ஆசிரிய/பேராசிரிய பெருமக்களே மாணவர்கள மூளைசலவை செய்யாதீங்க.தகுதியில்லாத படிப்ப மாணவர்கள மீது துணிக்காதீங்க.நீங்க வாழ பிறரை கெடிக்காதீங்க “ படித்தவன் பாவம் செய்தல் ஐயோ ஐயோ என்று போவான் “ மனசுல வைங்க, B.Sc(Software/CT/SS/CS and IT)படின்னு படிக்குற மாணவன் வாழ்க்கைய கெடுக்காதீங்க.சேர்க்குறதுக்கு முன்னாடி உண்மைய சொல்லி கல்லூரில சேருங்க .இத படிக்குற மாணவ மாணவியரே நல்ல வழிகாட்டிகிட்ட ஆலோசனை கேளுங்க.நாங்க கூட பேராசிரியர்களால் ஏமாற்ற பட்ட ஏமாளி ஆசிரியர்கள்.


    இப்படிக்கு

    Madurai Kamarai University ஆல் ஏமாற்ற பட்ட M.Sc(CS and IT) மாணவ மாணவியர்


    ப்ளீஸ் !!! share பண்ணாம போயிராதீங்க...🙏🙏🙏ohhhh

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய மாணவர்களே /ஆசிரியர்களே /பொதுமக்களே ! இத படிக்காம போகாதீங்க ப்ளீஸ் !!!


    பள்ளிக்கூட ஆசிரியர்களான நாங்க எங்களோட கஷ்டத்த ஷேர் பண்ணுறோம் !!!������


    நண்பர்களே ! நாங்க சுமார் 4500 பேர்க்கு மேல மதுரை காமராஜ் பல்கலைக்கழத்துல 2001 -2016 வரைக்கும் M.Sc(CS and IT) படித்தோம் ,சுமார் 2000 பேர்க்கு மேல B.Ed முடிச்சிருக்கோம்.இப்ப நாங்க TRB Computer Instructor Grade-I க்கு Apply கூட பண்ணமுடியால.MCA/M.SC(CS)/M.SC(IT) மட்டும் Apply பண்ணலாம்.நாங்க எல்லாரும் இப்ப பள்ளிக்கூடம்/கல்லூரி வேலை பார்த்துட்டு இருக்கோம்.நாங்க படுச்சது M.Sc(CS) Syllabus தான் பெயர் மட்டும் M.Sc(CS and IT) .

    இத ஏன் MKU நடத்தணும்?Board Of studies என்ன பண்ணுச்சு ?Acadamic Council என்ன பண்ணுச்சு ? இதுக்கெல்லாம் ஒரு பதிலும் இல்ல .M.Sc(CS and IT) கொண்டு வந்தவுங்க படுச்சவுங்களா? பணத்த கொடுத்து வேலைக்கு வந்த பேராசிரியர் எப்படி இருப்பாங்கன்னு நினைக்க தோணுது.பேராசியர்களே இப்படி பண்ற போது மத்தவுங்ககிட்ட நல்லத எப்படிஎதிர்பார்க்கமுடியும்?


    நாங்க என்ன பண்ணுறதுன்னு தெரியல.குடும்பத்த விட்டுட்டு கோர்ட்டு கேசுன்னு அலைய முடியல ,பொருளாதார வசதியும் இல்ல,எங்களுக்கு மனஉளைச்சல் தான். கல்லூரி-யூனிவர்சிட்டியா கேட்கசொல்லுது, யூனிவர்சிட்டிஅரச கேட்கசொல்லுது M.Sc(CS and IT) கொண்டு வருவத ஓரே ஒரு நல்ல ஆசிரியர் நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம்.ஒரு தவறு இப்ப எங்களோட வாழ்க்கைய பாதிக்குது.அதுவும் கல்விக்கு பெயர்போன காமராசர் பெயர வச்சிருக்குற MKU இப்படி பண்ணிருக்குறதுதான் கொடுமையிலும் கொடுமை.

    இத படிக்குறவுங்க மற்ற Group க்கு ஷேர் பண்ணுங்க.இது கண்டிப்பா ஒரு நல்ல ஆசிரியர்/வழக்கறிஞர்/நீதிபதி/அரசியல்வாதி/காவல்துறை/பொதுமக்கள இது போய் சேரும்.இதனால எங்களுக்கு நல்லது கூட நடக்கலாம் அவங்க ஏமாறுவதை கூட தடுக்கலாம்..ப்ளீஸ் உங்களோட ஒரு ஷேர் எங்களுக்கு உதவலாம் ப்ளீஸ். ��தயவு செய்து எல்லாரும் மெயின் subject படிங்க.Ex: B.Com, B.Sc(Botany,Zoology,Chemistry,Physics,Computer Science) படிக்கலாம் ,B.Com(IT),B.Sc(Software System) போல mixed வேண்டவே வேண்டாம்.



    இத படிக்குற ஆசிரிய/பேராசிரிய பெருமக்களே மாணவர்கள மூளைசலவை செய்யாதீங்க.தகுதியில்லாத படிப்ப மாணவர்கள மீது துணிக்காதீங்க.நீங்க வாழ பிறரை கெடிக்காதீங்க “ படித்தவன் பாவம் செய்தல் ஐயோ ஐயோ என்று போவான் “ மனசுல வைங்க, B.Sc(Software/CT/SS/CS and IT)படின்னு படிக்குற மாணவன் வாழ்க்கைய கெடுக்காதீங்க.சேர்க்குறதுக்கு முன்னாடி உண்மைய சொல்லி கல்லூரில சேருங்க .இத படிக்குற மாணவ மாணவியரே நல்ல வழிகாட்டிகிட்ட ஆலோசனை கேளுங்க.நாங்க கூட பேராசிரியர்களால் ஏமாற்ற பட்ட ஏமாளி ஆசிரியர்கள்.


    இப்படிக்கு

    Madurai Kamarai University ஆல் ஏமாற்ற பட்ட M.Sc(CS and IT) மாணவ மாணவியர்


    ப்ளீஸ் !!! share பண்ணாம போயிராதீங்க...������

    ReplyDelete
    Replies
    1. வழக்கு தொடர்ந்தால் exam எழுத அனுமதி கிடைக்கும் bro

      Delete
  3. TRB/ TNPSC UG/ PG CHEMISTRY CLASSESS WILL START SHORTLY FOR FORTHCOING NOTIFICATION OF BT/BEO/PG/JC/JSO.CLASSES SATURDAY AND SUNDAY ONLY.INTERESTED CAN REGISTER YOUR NAME,MOB.NO, TO 9884678645. CANDIDATES ARE SELECTED BASED ON SCREENING TEST

    ReplyDelete
  4. ipadiyea verum vaayala vadaiya sudurathu ini ethana naalaiku..?

    ReplyDelete
  5. Where is the job for the past exams trb?????

    ReplyDelete
  6. UG->B.Ed->PG -Anyone have applied for the post PG TRB computer instructors in this hierarchy?

    ReplyDelete
  7. UG below 45% mark iruntha tet paper 2 apply panna mudiyatha

    ReplyDelete
  8. *45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது*

    TRB அறிவிப்பு. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி 2012 முதல் இதுவரை தமிழ்கத்தில் 4 முறை TET தேர்வு நடைபெற்றுள்ளது.

    இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர். அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    இந்நிலையில் 2019 ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ஆனால் இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UG ல் OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதிய விதிமுறை வகுத்துள்ளது.

    TRB ன் இந்த புதிய விதிமுறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வு எழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

    *கோரிக்கைகள்*

    1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற UG ல் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / ST பிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேர முடியும். இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்று TET தேர்வை எழுதுகின்றனர்.
    இந்நிலையில் TET தேர்வுக்கென தனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பது சரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது.

    2. TRBன் இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44% மதிப்பெண்கள் வரை பெற்று B.Ed பட்டம் பெற்ற M. BC மாணவர்களும்; 40-44 % மதிப்பெண்கள் வரை பெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் B.ED பட்டப் படிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது.

    3. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் B.ED., பட்டப் படிப்பில் சேர UG ல் குறைந்தபட்ச ம் 40 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ் பெற்ற தமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப் படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கலசலிங்கம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கல்வியியில் கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். கடந்த TET தேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களில் சிலர் தேர்ச்சி பெற்றுப் பணி நியமனமும் பெற்றுள்ளனர்.

    4. தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப் படிப்பில் UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள் பயின்று வருகின்றனர். TET தேர்வை UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள் எழுத முடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பது முரணானது இல்லையா? எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம் பெற்ற தமிழக மாணவர்கள் அனைவரையும் TET தேர்வு எழுத அனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். எனவே தயவு செய்து தமிழக அரசும் , ஆசிரியர் தேர்வு வாரியமும் B.ED பட்டம் பெற்ற அனைவரையும் TET தேர்வு எழுத அனுமதித்து உடனடியாக அரசாணை வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி