மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2012

மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு.

டெல்லி: நாட்டின் 81வதுபட்ஜெட்டில், 6000 மாதிரிப் பள்ளிகள் 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏற்படுத்தப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கென்று ஒதுக்கீடுகள் மற்றும்சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அவை பின்வருமாறு; * 12வது ஐந்தாண்டு திட்டத்தில், மொத்தம் 6000 மாதிரிப் பள்ளிகள்நாடு முழுவதும் தொடங்கப்படும். * கல்வி உரிமைச் சட்டம்(RTE) - சர்வ சிக்சா அபியான்(SSA) திட்டத்திற்காக, இந்த 2012-13 நிதியாண்டில் ரூ.25,555 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 21.7% அதிகம். * ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா அபியான்(RMSA) திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.3124 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டைவிட 29%அதிகம். * மாணவர்களுக்கு எளிதான முறையில் கல்விக்கடன் கிடைக்க, கடன் உத்திரவாத நிதியம் ஏற்படுத்தப்படும். * பள்ளிக் கல்விக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. * 7 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆராயச்சி மையங்களாக தரம் உயர்த்தப்படும். * பள்ளிகளின் மதிய உணவுதிட்டத்திற்கு ரூ.11000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சில சலுகைகள், மிக முக்கியமான துறையான கல்வித்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி