ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ., அறிமுகம்.தொழில் படிப்புகளை வேலைவாய்ப்புகள் சார்ந்ததாக இருக்கும் வகையில், இரட்டை பட்டங்களை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய புதிய படிப்பை AICTE (All India Council for Technical Education) தொடங்க உள்ளது. 12ம் வகுப்புக்கு பின்னர் AICTE அறிமுகம் செய்துள்ள மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இளநிலை பட்டம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டில் முதுநிலை பட்டம் வழங்கப்படும். 12ம் வகுப்புக்குப் பின்னர் இந்தப் படிப்பில் சேரும் மாணவனுக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்படும் இளநிலை பட்டத்தைக் கொண்டு மேலாண்மைத் துறையில் அவர் பணியாற்றலாம். ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மீண்டும் அதே படிப்பை ஓராண்டுகள் படித்து முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்யும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது எனAICTE  தலைவர் எஸ்.எஸ். மந்தா தெரிவித்துள்ளார். பொது நுழைவுத் தேர்வு மூலம் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள், அவர்கள் விருப்பப்படி மூன்றாவது ஆண்டிலோ அல்லது நான்காவது ஆண்டிலோ வேலைவாய்ப்புக்கு செல்லலாம். அதன் பின்னர் எப்போது விரும்புகிறார்களோ அப்போது மீண்டும் தங்களின் படிப்பைத் தொடரலாம் என அவர் குறிப்பிட்டார். இதேபோல் மற்றொரு ஒருங்கிணைந்த படிப்பில், தொழிற்கல்வியை, மேலாண்மைப் பாடத்துடன் இணைக்கும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேலாண்மையாளர்களுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு இந்தப் படிப்பை 5 ஆண்டு கால இரட்டை பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் மந்தா, இந்தப் படிப்பில் 6 மாத காலத்திற்கு தொழிற்சாலை சார்ந்த பயிற்சி (Internship) அளிக்கப்படும் என்றார். இந்தப் படிப்பை படிக்கும் மாணவர்கள் CAT அல்லது MAT தேர்வுகளை எழுதத் தேவையில்லை என்றும், ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த மேலாண்மைப் பட்டத்தை மாணவர்கள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படிப்புகளூம், 2012- 13ம் நிதியாண்டிலேயே தொடங்கப்படும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2012

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ., அறிமுகம்.தொழில் படிப்புகளை வேலைவாய்ப்புகள் சார்ந்ததாக இருக்கும் வகையில், இரட்டை பட்டங்களை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய புதிய படிப்பை AICTE (All India Council for Technical Education) தொடங்க உள்ளது. 12ம் வகுப்புக்கு பின்னர் AICTE அறிமுகம் செய்துள்ள மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இளநிலை பட்டம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டில் முதுநிலை பட்டம் வழங்கப்படும். 12ம் வகுப்புக்குப் பின்னர் இந்தப் படிப்பில் சேரும் மாணவனுக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்படும் இளநிலை பட்டத்தைக் கொண்டு மேலாண்மைத் துறையில் அவர் பணியாற்றலாம். ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மீண்டும் அதே படிப்பை ஓராண்டுகள் படித்து முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்யும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது எனAICTE  தலைவர் எஸ்.எஸ். மந்தா தெரிவித்துள்ளார். பொது நுழைவுத் தேர்வு மூலம் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள், அவர்கள் விருப்பப்படி மூன்றாவது ஆண்டிலோ அல்லது நான்காவது ஆண்டிலோ வேலைவாய்ப்புக்கு செல்லலாம். அதன் பின்னர் எப்போது விரும்புகிறார்களோ அப்போது மீண்டும் தங்களின் படிப்பைத் தொடரலாம் என அவர் குறிப்பிட்டார். இதேபோல் மற்றொரு ஒருங்கிணைந்த படிப்பில், தொழிற்கல்வியை, மேலாண்மைப் பாடத்துடன் இணைக்கும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேலாண்மையாளர்களுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு இந்தப் படிப்பை 5 ஆண்டு கால இரட்டை பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் மந்தா, இந்தப் படிப்பில் 6 மாத காலத்திற்கு தொழிற்சாலை சார்ந்த பயிற்சி (Internship) அளிக்கப்படும் என்றார். இந்தப் படிப்பை படிக்கும் மாணவர்கள் CAT அல்லது MAT தேர்வுகளை எழுதத் தேவையில்லை என்றும், ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த மேலாண்மைப் பட்டத்தை மாணவர்கள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படிப்புகளூம், 2012- 13ம் நிதியாண்டிலேயே தொடங்கப்படும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.

தொழில் படிப்புகளை வேலைவாய்ப்புகள் சார்ந்ததாக இருக்கும் வகையில், இரட்டை பட்டங்களை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய புதிய படிப்பை AICTE (All India Council for Technical Education) தொடங்க உள்ளது. 12ம் வகுப்புக்கு பின்னர் AICTE அறிமுகம் செய்துள்ள மேலாண்மைப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இளநிலை பட்டம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டில் முதுநிலை பட்டம் வழங்கப்படும். 12ம் வகுப்புக்குப் பின்னர் இந்தப் படிப்பில் சேரும் மாணவனுக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வழங்கப்படும் இளநிலை பட்டத்தைக் கொண்டு மேலாண்மைத் துறையில் அவர் பணியாற்றலாம். ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மீண்டும் அதே படிப்பை ஓராண்டுகள் படித்து முதுநிலைப் பட்டத்தை நிறைவு செய்யும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது எனAICTE  தலைவர் எஸ்.எஸ். மந்தா தெரிவித்துள்ளார். பொது நுழைவுத் தேர்வு மூலம் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள், அவர்கள் விருப்பப்படி மூன்றாவது ஆண்டிலோ அல்லது நான்காவது ஆண்டிலோ வேலைவாய்ப்புக்கு செல்லலாம். அதன் பின்னர் எப்போது விரும்புகிறார்களோ அப்போது மீண்டும் தங்களின் படிப்பைத் தொடரலாம் என அவர் குறிப்பிட்டார். இதேபோல் மற்றொரு ஒருங்கிணைந்த படிப்பில், தொழிற்கல்வியை, மேலாண்மைப் பாடத்துடன் இணைக்கும் வகையில் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேலாண்மையாளர்களுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு இந்தப் படிப்பை 5 ஆண்டு கால இரட்டை பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் மந்தா, இந்தப் படிப்பில் 6 மாத காலத்திற்கு தொழிற்சாலை சார்ந்த பயிற்சி (Internship) அளிக்கப்படும் என்றார். இந்தப் படிப்பை படிக்கும் மாணவர்கள் CAT அல்லது MAT தேர்வுகளை எழுதத் தேவையில்லை என்றும், ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த மேலாண்மைப் பட்டத்தை மாணவர்கள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படிப்புகளூம், 2012- 13ம் நிதியாண்டிலேயே தொடங்கப்படும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி