பள்ளிக்கல்வித்துறையில் மூன்று இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசுஉத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2012

பள்ளிக்கல்வித்துறையில் மூன்று இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசுஉத்தரவு.

பள்ளிக் கல்வித் துறையில், ராமேஸ்வர முருகன் உட்பட மூன்று இணை இயக்குனர், இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை - இடைநிலைக் கல்வி, இணை இயக்குனராக இருந்த ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனராகவும், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் - தொழிற்கல்வி, மோகன்ராஜ், முறைசாரா கல்வி இயக்குனராகவும், நூலகத் துறை இணை இயக்குனர் பிச்சை, பாடநூல் கழக செயலராகவும் - இயக்குனர் நிலை, பதவி உயர்வு பெற்றுள்ளனர்.மேலும்,தொடக்கக்கல்வி இயக்குனர் சங்கர், ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனராகவும், நூலகத் துறை இயக்குனர் அன்பழகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும் - இயக்குனர் நிலை, பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளனர். நூலகத் துறை இயக்குனராக அன்பழகன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "நூலகத் துறை இயக்குனர் பதவியில் நியமிப்பதற்கு உரிய தகுதி அன்பழகனுக்கு இல்லை. எனவே அவரதுநியமனம் செல்லாது' என, கடந்த மாதம், ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நூலகத் துறை இயக்குனராக, தகுதி வாய்ந்தவர் விரைவில் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. "ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, தனி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்படும்' என, தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, தற்போது சங்கர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி