பொறியியல் கவுன்சிலிங் தேதி மாறுமா? - துணைவேந்தர் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2012

பொறியியல் கவுன்சிலிங் தேதி மாறுமா? - துணைவேந்தர் தகவல்.

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை மாற்றுவது குறித்து, தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்தான் முடிவு செய்யப்படும்," என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை, கடந்த மாதம் 11ம் தேதி துவங்கி, நேற்று((மே 31)) வரை நடந்தது. மொத்தம், இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 243 விண்ணப்பங்கள், விற்பனை ஆகி உள்ளன. கடைசி இரண்டு நாளில் மட்டும், 5,291 விண்ணப்பங்கள் விற்றுள்ளன.எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துள்ளதால், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர, மாணவர்கள் மத்தியில் கடும்போட்டி நிலவும் எனத் தெரிகிறது. வழக்கமாக, மருத்துவப் படிப்பு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்திற்கு பின்தான், பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கும்.இந்த ஆண்டு, ஜூலை 2ம் தேதி துவங்குவதாக இருந்த மருத்துவப் படிப்புக்கான பொது கலந்தாய்வு, ஜூலை 5ம் தேதி மாற்றப்பட்டது. இதனால், பொறியியல் படிப்பு பொது கலந்தாய்வு தேதி மாற்றப்படுமா என்ற சந்தேகம், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதுகுறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியபோது, "பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு, ஜூலை 9ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியை மாற்றுவது குறித்து, அடுத்தவாரம் நடைபெறும், மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்தான் முடிவு செய்யப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி