குரூப்-2 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2012

குரூப்-2 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்றுடன், ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப்-2 நிலையில், 3,631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் 13ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.பட்டதாரிகள், இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை தாண்டிவிட்டதாக, தேர்வாணையச் செயலர் உதயசந்திரன் தெரிவித்தார். தேர்வுக் கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம்.வி.ஏ.ஓ., தேர்வு:வி.ஏ.ஓ., தேர்வுக்கு, ஒவ்வொரு நாளும் 75 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிப்பதாக, செயலர் தெரிவித்தார். இதே நிலையில் சென்றால், 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பேருக்கும், எத்தனை தேர்வு மையங்களைப் பார்ப்பது, தேர்வை எப்படி நடத்தி முடிப்பது என, இப்போதே தேர்வாணையம் தீவிரமாக யோசித்து வருகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி