மூன்று புதிய துணைவேந்தர்கள் நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2012

மூன்று புதிய துணைவேந்தர்கள் நியமனம்.

மூன்று பல்கலைக்கழகங்களில், காலியாக இருந்த துணைவேந்தர் பணியிடங்களுக்கு, புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழல் துறை தலைவராக இருந்த குமரகுரு, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், மரபியல் துறை தலைவர் குணசேகரன், வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகத்தில், பதிவாளர் மணிமேகலை, கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசின் உயர்கல்வி துறை நேற்று வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி