புதுவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 100%"பெயில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2012

புதுவையில் ஆசிரியர் தகுதித் தேர்வு 100%"பெயில்

தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வுமுடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 2-வது தாளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல் தாளில் 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த ஜூலை 12-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பட்டயம் பெற்றவர்களும், பட்டம் பெற்றவர்களும் தேர்வெழுதினர்.முதல் தாளை 4,769 பேரும், 2-வது தாளை 4,501 பேரும் எழுதினர். இதன் முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.இதில் 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.மீண்டும் தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நடத்தப்படுகிறது. இதில், ஜூலை 12-ம் தேதி தேர்வெழுதி, 60 விழுக்காடு மதிப்பெண் பெறத் தவறியவர்கள் கலந்து கொள்ளலாம்.இதற்காகத் தனியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. மேலும், முதல் தாள் மற்றும் 2-ம் தாளுக்கு விடையளிப்பதற்கானகால அவகாசமும் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி