சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2012

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பின் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற, 1,735 பேரை, விரைவில் வெளியாக உள்ள, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.கடந்த 25ம் தேதி வெளியான, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில், இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், 1,735 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தி,இறுதிப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.வழக்கமாக, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆனால், தேர்ச்சி எண்ணிக்கை குறைவாக உள்ளதால், திருச்சி, நெல்லை,மதுரை, கோவை, சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நடத்த, டி.ஆர்.பி., ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவும், டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.வழக்கு: இடைநிலை ஆசிரியர்கள் முன்பு, மாவட்டஅளவிலான பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர். தென் மாவட்டத்தைச் சேர்ந்த பதிவுதாரர்கள், "மாவட்ட பதிவு மூப்பு எனில், எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பட்டதாரி, முதுகலை ஆசிரியரைப் போல், இடைநிலை ஆசிரியரையும், மாநில பதிவு மூப்பில் நியமிக்க வேண்டும்' என, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.இதைத் தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும், மதுரைகிளையின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
அரசு விருப்பம்:
தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழகஅரசு மேல்முறையீடு செய்தது.ஆனால், வழக்கு விசாரணையின் போது, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்ய, தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது; அதன்படி பணி நியமனம் செய்துவருவதையும் தெரிவித்தது. இந்த வழக்கில், செப்., 15க்குள் தீர்ப்பு வரும் என,எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தீர்ப்பின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியரை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி