தேர்வுத்துறை மதிப்பீடு: காலாண்டு விடைத்தாளை ஆய்வு செய்ய திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2012

தேர்வுத்துறை மதிப்பீடு: காலாண்டு விடைத்தாளை ஆய்வு செய்ய திட்டம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள், தேர்வுத் துறை அனுப்பும் கேள்வித்தாள் அடிப்படையில் நடக்க இருப்பதால், விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பொதுத் தேர்வை மட்டுமல்லாமல், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளையும், தேர்வுத் துறையே நடத்துகிறது.செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து, காலாண்டுத் தேர்வுகள் நடக்கின்றன. 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் துவங்குகின்றன.தேர்வுக்காக, பாட வாரியாக கேள்விகள் தயாரிக்கும் பணி, தேர்வுத் துறையில் நடந்து வருகிறது.கேள்விகளை, "சிடி&' யில் பதிவு செய்து, மாவட்ட வாரியாக, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறைவிரைவில் அனுப்ப உள்ளது."சிடி&' யில் இருந்து, தேவையான கேள்வித்தாள்களை, "பிரின்ட்&' எடுத்து, மாணவ, மாணவியருக்கு வினியோகம் செய்ய, பள்ளி தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.விடைத்தாள்களை, சம்பந்தப்பட்டபள்ளி ஆசிரியர்களே மதிப்பீடு செய்வர். எனினும், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாள் அடிப்படையில், மாணவ, மாணவியர் எப்படி தேர்வு எழுதியிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள, விடைத்தாள்களை ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.தேர்வுத்துறை வட்டாரங்கள் இதுகுறித்து கூறியதாவது:பொதுத்தேர்வு எப்படி நடக்குமோ, அதே நடைமுறையில், காலாண்டுத் தேர்வும், அரையாண்டுத் தேர்வும் நடக்கும். வகுப்புகளில், ஆசிரியர் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும், பொதுத்தேர்வில், சிவப்பு மற்றும் பச்சை நிற,"ஸ்கெட்ச்&' எழுது கருவிகளை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்,காலாண்டுத் தேர்வில் இருந்தே எடுக்கப்படும்.இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி