அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் டி.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் மூண்றாண்டு பி.எல். படிப்பில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்கு 6,110 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான கட் ஆப் மார்க் வெளியிடப்பட்டு இருக்கிறது. சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும், பல்கலைக்கழக தகவல் பலகையிலும் கட் ஆப் மார்க் பட்டியலை பார்க்கலாம்.அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.பொதுப்பிரிவு- 71.033பிற்படுத்தப்பட்டோர்- 64.090பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்)- 63.217மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்- 63.478ஆதி திராவிடர்- 56.807ஆதி திராவிடர் (அருந்ததியர்)- 62.474பழங்குடியினர்- 56.807 சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வு,சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். தகுதியுள்ள மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் கட் ஆப் மார்க்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட நாளில் கவுன்சிலிங்கிற்கு நேரடியாக மாணவர்கள் வந்துவிடலாம். இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் ரேங்க் பட்டியலை மாணவர்கள் எடுத்து வர வேண்டும். கலந்தாய்வின் போது காலி இடங்கள் ஏற்பட்டால் அவை காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களால் நிரப்பப்படும். இதற்கான கவுன்சிலிங் 22, 24, 25ம் தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி