நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள 12 முதுநிலை பட்டதாரிஆசிரியர் பணி இடங்களுக்கு 62 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நிறைவுபெற்றது. அவர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்குவதற்கான நேர்காணல் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிரேஸ் சுலோச்சனா ரத்னாவதி தலைமையில் நேற்று நடந்தது. நெல்லை மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 12 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு தகுதி உள்ள 62 ஆசிரியை, ஆசிரியர்கள் வந்திருந்தனர். இவர்களில் அரசு அறிவித்துள்ள பதிவு மூப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் உள்ள 12 பேருக்கு பணிநியமன உத்தரவை முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்.முன்னதாக காலியாக உள்ள 12 ஆசிரியர் பணி இடம் பற்றிய விவரம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. நெல்லை மாவட்டத்தில் இடம் கிடைக்காதவர்களுக்கு தொடர்ந்து திருச்சியில் நடைபெறும் கலந் தாய்வில் பிற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர். ஒரே ஒரு கணித ஆசிரியர் பதவி: பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான தகுதி உடைய ஆசிரியர்கள் திரண்டதால் நிரப்பப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. கணித ஆசிரியர் பணிக்கு புளியரையில் மட்டுமே இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரம், வரலாறு பாடங்களுக்கும் தலா ஒரு இடம், வணிகவியல் உடற்கல்வி இயக்குனர், இயற்பியல், தமிழ் ஆகிய பாடங்களுக்கு தலா 2 இடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கலந்தாய்வில் தேர்வு பெற்று நெல்லை மாவட்டத்தில் இடம் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி