ஏ.டி.எம்.,மில்( A.T.M ) பணத்தை எடுக்காவிட்டாலும் இனி உள்ளிழுக்காது - ரிசர்வ் வங்கி புது உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2012

ஏ.டி.எம்.,மில்( A.T.M ) பணத்தை எடுக்காவிட்டாலும் இனி உள்ளிழுக்காது - ரிசர்வ் வங்கி புது உத்தரவு

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், இயந்திரத்தில் இருந்து ரூபாய் நோட்டுகளை, கையில் எடுக்கத் தவறினால், அப்பணத்தைமீண்டும், இயந்திரம் உள்ளிழுத்துக் கொள்ளும் வசதியை,ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.   ஏ.டி.எம்., மையங்களில், பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள், தேவையான தொகையை இயந்திரத்தில் பதிவு செய்ததை அடுத்து, சில வினாடிகளில், ரூபாய் நோட்டுகள் வெளிவரும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வாடிக்கையாளர்கள் அவற்றை கையில் எடுக்காவிட்டால், அந்தரூபாய் நோட்டுகளை இயந்திரம் மீண்டும் உள்ளிழுத்துக் கொள்ளும்.   அனைத்து வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்களிலும் இந்த நடைமுறையே அமலில் இருந்தது. இந்நிலையில், பணத்தை இயந்திரம் இழுத்துக் கொண்டதாக ஏராளமான புகார்கள், வங்கிகளுக்கு வந்த வண்ணம் இருந்தன.இப்புகார்களை பரிசீலித்த, தேசிய பணப்பட்டுவாடா கமிஷன், ஏராளமானவை பொய் புகார்களாக இருப்பதை கண்டுபிடித்தன. இதையடுத்து, ஏ.டி.எம்., மையங்களில் இந்த வசதியை நீக்கஉத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்தது.   இதையடுத்து, வங்கி ஏ.டி.எம்.,களில், வாடிக்கையாளர்களால் எடுக்கப்படாத ரூபாய் நோட்டுகளை இயந்திரம் உள்ளிழுக்கும் வசதியை ரத்து செய்து, கடந்த வாரம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அனைத்து வங்கிகளும் கடைபிடிக்கத் துவங்கியுள்ளன. இதுதொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டும் வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி