அரசு பள்ளிகளில் நியமனம் பெற சி.பி.எஸ்.இ., தகுதித்தேர்வு பொருந்தாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2012

அரசு பள்ளிகளில் நியமனம் பெற சி.பி.எஸ்.இ., தகுதித்தேர்வு பொருந்தாது

"சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது,' என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது."தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை, சி.பி.எஸ்.இ.,நடத்துகிறது. இத்தேர்வை ஏற்காத மாநிலங்கள், தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்ளலாம்' என, மத்திய அரசு, ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) நடத்தும் பொறுப்பை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், தமிழக அரசு வழங்கியது. கடந்த, ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட இத்தேர்வில், எதிர்பார்த்த அளவிற்கு தேர்ச்சி சதவீதம் அமையாததால், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சி.பி.எஸ்.இ., நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக தேர்வரை, ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்ற கேள்விஎழுந்து உள்ளது.மத்திய அரசு பாடத் திட்டம், தரம் வாய்ந்ததாக உள்ளது என்ற காரணமும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவல்:சி.பி.எஸ்.இ., நடத்தும், டி.இ.டி., தேர்வு, மத்திய அரசுபாடத்திட்டபடி நடக்கிறது. எனவே, அத்தேர்வில் தேர்ச்சிபெறுபவர், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட, மத்தியஅரசுப் பள்ளிகளில் மட்டுமே,பணியில் சேர முடியும். அவர்களை, தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியாது. தமிழக அரசு நடத்தும், டி.இ.டி., தேர்வு, மாநில பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் எனில், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., தேர்வைத் தான் எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி