லஞ்ச புகாருக்கு ஆளான அரசு ஊழியரை, துறை ரீதியான விசாரணை,"குற்றமற்றவர்' என, கூறினாலும், அதனடிப்படையில், அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. குடி தண்ணீர் இணைப்பு தர, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, டில்லியைச் சேர்ந்த, குடிநீர் வாரிய பொறியாளர் ஒருவர் மீது, வழக்கு தொடரப்பட்டது; இந்த லஞ்ச புகார் தொடர்பாக, துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டது. அதில், அவர் குற்றமற்றவர் என, தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அந்தப் பொறியாளர், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "லஞ்சம் வாங்கியதாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து, துறைரீதியான விசாரணை நடந்தது. அதில், என் மீது, எந்த தவறும் இல்லை என, கூறப்பட்டுள்ளது. எனவே, என் மீதான லஞ்ச வழக்கை, ரத்து செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.இந்த மனுவை, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான,"பெஞ்ச்' விசாரித்து தீர்ப்பளித்தது; தீர்ப்பில் கூறப்பட்ட தாவது:லஞ்ச புகாருக்கு ஆளான, அரசு ஊழியரை,துறை ரீதியான விசாரணை,"குற்றமற்றவர்' என, கூறினாலும், அதை காரணமாக வைத்து, ஊழல் வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க முடியாது; அவர் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது. ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே, அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்வதா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி