தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வருமாறு:- காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஹனிஷ் சாப்ரா, வேளாண் துறை கூடுதல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட கலெக்டர் அஜய்யாதவ் நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும், நாமக்கல் கலெக்டர் ஜே.குமரகுருபரன், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனராகவும், அரியலூர் கலெக்டர் அனு ஜார்ஜ், பொதுத்துறை (புரோட்டோகால்) இணை செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேளாண்துறை கூடுதல் இயக்குனராக பணியாற்றிய எல்.சித்திரசேனன் காஞ்சிபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பி.சங்கர் வேலூர் மாவட்ட கலெக்டராகவும், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த டி.ஜெகநாதன் நாமக்கல் மாவட்ட கலெக்டராகவும், பொதுத்துறை துணை செயலாளராக பணியாற்றிய பி.செந்தில்குமார் அரியலூர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி