வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2012

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், மாற்றம் செய்தலுக்கான விண்ணப்பங்களை வரும் 20ம் தேதி வரை வழங்க கால அவகாசம் நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 1.1.2013ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும்,வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம், மாற்றம் செய்தல்தொடர்பாகவும் வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.வரைவு வாக்காளர் பட்டியலை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல்மற்றும் மாற்றம் செய்தலுக்கான விண்ணப்பங்களை வாக்காளர்கள் போட்டி போட்டு கொண்டு அளித்த வண்ணம் இருந்தனர். விண்ணப்பங்களை அளிக்க நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டதால் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.இந்நிலையில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியலில் குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் மாற்றம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி