மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2013

மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு.

click here to download the SSA proceeding of RTE 2009 Awareness Competitions to 1 to 11 std Students

click here to download the Competition Topics
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், இம்மாதம், 21 முதல், பிப்., 6 வரை, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கலை, இலக்கிய போட்டிகள் நடக்க உள்ளன. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பல்வேறு கலை இலக்கிய போட்டி நடக்க உள்ளது.இதில், ஒன்று முதல் எட்டு வகுப்புகள் ஒரு பிரிவாகவும்; ஒன்பது முதல், 10 வகுப்புகள் வரை, ஒரு பிரிவாகவும்; 11 மற்றும் 12 வகுப்பு வரை, ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப் படுவர். இதில், ஒன்றியஅளவில் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு, முறையே, 500, 300, 200 ரூபாயும்; மாவட்ட அளவில், 5,000, 3,000, 2,000 ரூபாயும்; மாநில அளவில், 20 ஆயிரம்,10 ஆயிரம், 5,000 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. பள்ளி அளவிலான போட்டிகள், இம்மாதம், 21 முதல், 25 வரையிலும்; ஒன்றிய அளவிலான போட்டிகள், 28 முதல், 30 வரையிலும்; மாவட்ட அளவிலான போட்டிகள், பிப்.,முதல், 6 வரையிலும் நடக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி